‛‛இன்று + ஜுன் 4’’.. சென்னை மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம்.. நோட் பண்ணுங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய நாட்களில் சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே இயங்கும் 8 ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் விரைவாக பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றன.

chennai chengalpattu electric train indian railway

இந்நிலையில் தான் சென்னை எழும்பூர் - விழுப்புரம் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய 2 நாட்கள் சென்னை பீச்- செங்கல்பட்டு இடையே இயங்கும் 8 ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூர் - விழுப்புரம் பிரிவு (செங்கல்பட்டு யார்டு) இடையே இன்று (மே 31) மற்றும் ஜுன் 4ம் தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 4 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய நாட்களில் 8 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட உள்ளன.

அதன்படி காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (வண்டி எண் 40523), காலை 10.56 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (40527), காலை 11.40 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (வண்டி எண் 40529), மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (40533) ஆகிய ரயில்கள் இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய தேதிகளில் சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே இயங்காது.

அதேபோல் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40532), மதியம் 1 மணிக்கு பறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40536), மதியம் 1.45 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40538), மதியம் 3.15 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40542) ஆகியவை செங்கல்பட்டு - சிங்கம்பெருமாள் கோவில் இடையே இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய தேதிகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த ரயில்களை பயன்படுத்துவோர் இந்த 2 நாட்களிலும் குறிப்பிட்ட இந்த நேரங்களில் தங்களது பயணத்துக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வது சிறந்ததாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+