சென்னை பீச் - தாம்பரம் ரூட் பயணிகளே அலர்ட்! ஒரு வாரத்துக்கு இந்த டைமிங்கில் மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை: இன்று புதன்கிழமை (14 ஆம் தேதி) முதல் 18 ஆம் தேதி வரையில் நள்ளிரவு 12.10 முதல் காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும், சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. புறநகரில் இருந்து சென்னைக்குள் வந்து செல்ல மின்சார ரயில்களையே பயணிகள் பெரிதும் நம்பியுள்ளனர். டிராபிக் நெரிசல் இன்றி சரியான நேரத்தில் ரயிலில் வந்து விட முடியும் என்பதால் பயணிகள் அதிக அளவில் மின்சார ரயில்களை பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

சென்னை மின்சார ரயில் ரூட்களில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக அளவிலான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு சில நிமிடங்கள் ரயில்கள் வர தாமதம் ஆனாலும் கூட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகளின் பாதுகாப்பிற்காவும், ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் அவ்வப்போது பரமாரிப்பு பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொள்வது வழக்கம்.
பயணிகளுக்கு பெரிதும் பாதிப்பு இன்றி இரவு நேரங்கள், விடுமுறை நாட்களில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
அதாவது இன்று புதன்கிழமை (14 ஆம் தேதி) முதல் 18 ஆம் தேதி வரையில் நள்ளிரவு 12.10 முதல் காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும், சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படவும் உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 17 ஆம் தேதி வரை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 18 ஆம் தேதி வரை அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதே நாட்களில் , தாம்பரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அதேபோல செங்கல்பட்டில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும். அதே நாள்களில், சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்ரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது அவசியம்..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications