Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ரெடி? திமுகவை வீழ்த்த முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பாகச் சென்னையிலுள்ள 3 தொகுதிகளில் வேட்பாளர்களாக யார் யார்? நிறுத்தப்படலாம் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

தேசிய அளவிலான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. பட்டியலில் உள்ள சிலர் ஜகாவாங்கியதால், எதிர்க்கட்சிகள் 'குஷி'யில் இருக்கிறார்கள்.

Chennai BJP candidate list is ready

இந்தப் பட்டியலில் கூடவே தமிழக வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வடிவத்திற்கே வரவில்லை. ஆகவே அந்தப் பட்டியல் வெளியாகவில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

இதற்கு நடுவில் இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் பெயர் கட்டாயம் அறிவிக்கப்படும் என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார்.

Chennai BJP candidate list is ready

தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாள்களே உள்ளது. அதற்குள் பிரதமர் மோடி தமிழ்நாட்டைக் குறிவைத்து பயணத் திட்டங்களை முன்வைத்து அடிக்கடி வந்து போகிறார். அவரது முக்கிய பட்டியலில் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளது.

ஏனென்றால், காங்கிரசை எதிர்ப்பதைவிட, திமுகவை எதிர்ப்பதில் மோடி அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளார் என்றே புரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூட்டணியை விட்டு வெளியேறிய அதிமுக தொண்டர்களை அரவணைக்கப் பார்க்கிறார். அதே மற்றொரு பக்கம் திமுகவை ஒழித்தே தீருவேன் என்று கர்ஜித்து வருகிறார்.

Chennai BJP candidate list is ready

'திமுகவைப் பார்த்து இப்படிப் பேசிய பலரை நாங்கள் பார்த்துவிட்டோம். அப்படிச் சொன்னவர்கள் காணாமல் போனதுதான் வரலாறு' எனப் பிரதமர் பேச்சுக்குப் பதிலடி தந்திருந்தார் திமுக எம்.பி. கனமொழி.

சரி, சப்ஜெட்டுக்கு வருவோம். வானதி ஸ்ரீனிவாசன் சொன்னதைப் போலச் சென்னையைப் பொறுத்தளவில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயார் என்றே சொல்கிறார்கள்.

Chennai BJP candidate list is ready

சென்னையிலிருந்து ஒரு சீட் உறுதியாகக் கிடைக்கும் என பாஜக நம்புகிறது. சென்னையில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை.

இதில் மூன்று தொகுதியிலும் திமுகவுக்கு 75 ஆண்டுகள் வரலாறு உள்ளது. திமுக தொடங்கப்பட்டதே வடசென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில்தான் 1949இல் திமுக கட்சி தொடங்கப்பட்டது. அண்ணாதுரை காலத்தில் ராயபுரத்தில் தான் திமுக தலைமை அலுவலகம் செயல்பட்டது. ஆக, அன்று முதல் திமுக வளர்ச்சிக்கு உயிர் கொடுத்து வருகிறது வடசென்னை.

Chennai BJP candidate list is ready

முதன்முதலாக 1967இல் கிருஷ்ணன் மனோகரன் திமுக சார்பில் நின்று வென்றார். இதன்மூலம் இந்தத் தொகையைக் காங்கிரஸ் கையிலிருந்து பறித்தார். அதன்பின்னர் ஆசைத்தம்பி, என்விஎன் சோமு, சி.குப்புசாமி எனத் தொன்று தொட்டு இன்று கலாநிதி வீராசாமி வரை திமுகவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இங்கே அதிமுக கூட ஒரே ஒரு முறைதான் வெற்றி பெற்றுள்ளது.

அந்தளவுக்கு திமுகவின் ஆதிக்கம் உள்ள தொகுதி வடசென்னை. இந்த வரலாற்றை எல்லாம் முறியடித்துக் காட்ட வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக பாஜக சார்பாக இந்த முறைப் பால் கனகராஜ் களம் இறங்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Chennai BJP candidate list is ready

அந்த ஆசையில் கனகராஜும் பல பணிகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். பால் கனகராஜ் அந்தப் பகுதியில் அறிமுகமான முகம்தான். ஆனால், அந்தளவுக்கு வலிமையான கூட்டணி பாஜகவில் அமையாத போது திமுகவைத் தட்டி தூக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

அடுத்ததாக தென்சென்னை. தற்போது இதன் எம்.பி.ஆக தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளார். அவர் மீது தொகுதியில் சில அதிருப்திகள் இருப்பது உண்மை. அவரது செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்பதும் உண்மை.

Chennai BJP candidate list is ready

ஆனால், அதைத்தாண்டி திமுகவின் கோட்டை இது என்பதும் உண்மை. 1967இல் திமுகவை உருவாக்கிய அண்ணாதுரை நின்று வென்ற தொகுதி. அவருக்கு முன் இந்தியாவின் முதல் ஊழல் நாயகன் என்று சொல்லப்படும் டி,டி.கிருஷ்ணமாச் சாரி காங்கிரஸ் சார்பில் நின்று வென்ற தொகுதி. அண்ணாதுரைக்குப் பின்னர் அந்தத் தொகுதியை மு.கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்ட முரசொலி மாறன் நின்று 2 முறை வென்றார்.

அவருக்குப் பின்னர் டி.ஆர்.பாலு திமுக சார்பில் 4 முறை இந்தத் தொகுதி மக்களால் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைவிட ஹைலைட் நியூஸ் என்னவென்றால், நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகை வைஜயந்தி மாலா பாலி சந்தித்து உரையாடினார். அவர் காங்கிரஸ் சார்பாக நின்று வென்ற தொகுதியும் இதுதான். இவர் ஆலடி அருணாவைத் தோற்கடித்து வென்றார்.

Chennai BJP candidate list is ready

எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் உதயசூரியனின் உஷ்ணம் அதிகம் உள்ள தொகுதி. அப்படிப்பட்ட இதில் பாஜக சார்பாக 2024ல் தென் சென்னையில் இல கணேசன் கால்பதித்தார். அப்போது இரண்டரை லட்சம் வாக்குகளை அவர் பெற்றார்.

அந்த செல்வாக்கில் 2024இல் கரு.நாகராஜன் அல்லது எஸ்.ஜே.சூரியா நிறுத்தப் படலாம் என்கிறார்கள்.

இந்த இரண்டு பேரைத் தாண்டி டாக்டர் ஆனந்த பிரியா பாஜக சார்பாக நிற்க வாய்ப்பு தரப்படலாம் என்கிறார்கள். இவர் அண்ணாமலையின் 'குட் புக்'கில் இருக்கிறார். அத்துடன் கட்சி மாநாடுகளில் அதிகமாக ஆக்டிவ் ஆக உள்ளார்.

Chennai BJP candidate list is ready

அண்ணாமலையின் ஆதரவாளரான இவருக்குச் சீட்டு கிடைக்கலாம் என்கிறார்கள். சீரியர் ஆதிக்கத்தைக் குறைக்க அண்ணாமலை இவரை டிக் செய்வார் என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர் முட்டி மோதும் இந்தத் தொகுதியைச் சமீபத்தில் பாஜக பக்கம் தாவிய விஜயதரணியும் கேட்டுள்ளார். மேலிடச் செல்வாக்கு உள்ளதால், அதுவும் நடக்கலாம் என்கிறார்கள்.

கடைசியாக மத்திய சென்னைக்கு வருவோம். முரசொலி மாறன் செல்வாக்கை வைத்து அவரது மகன் தயாநிதி மாறன் 2004இல் இங்கே கால்பதித்தார். அவரது அப்பா மறைவால், இந்தத் தொகுதி மக்கள் அவரை அரவணைத்தனர். ஆக, 3 முறை எம்.பி. ஆக அவரை இந்தத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 2014இல் அவரை தோற்கவும் செய்துள்ளனர்.

எப்படிப் பார்த்தாலும் இந்தத் தொகுதியின் கடந்த கால வரலாறு திமுகவின் பலத்தைப் பேசுகிறது. அதற்கு இணையாக அதிமுகவைக் கூட வைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரே ஒருமுறைதான் அதிமுக 2014இல் வென்றது.

திமுகவின் செல்வாக்கு உயர்ந்து நிற்கும் இந்தத் தொகுதியில் பாஜக சார்பாக வினோஜ் பி செல்லம் நிறுத்தப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் துறைமுகம் தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் நின்றவர். அறிமுகமான முகம். ஆனால், வெற்றி முகமாக இருப்பாரா என்பது சந்தேகம் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+