“டக் அவுட்” ஆன ரோகித்.. திடீர் டிரெண்டான சென்னை சிறுவன்! சொன்னது என்ன? சிஎஸ்கே VS எம்ஐ பரிதாபங்கள்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா டக் அவுட் ஆக வேண்டும் என சென்னை அணியின் ரசிகரான ஒரு சிறுவன் பேட்டியளித்த நிலையில் அது நிறைவேறி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்றைய போட்டியில் பலரும் எதிர்பார்த்த சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎலில் அதிக விக்கெட்டுகளை கொண்ட இரு அணிகள் மோதும் போட்டியான இது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் வேக வேகமாக டிக்கெட்டுகளை வாங்கித் தீர்த்தனர்.

இன்று மாலை போட்டி தொடங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மைதானத்திற்கு அருகில் கூடிய ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ந்தனர். அப்போது மைதானத்திற்கு வெளியில் நின்றுகொண்டு இருந்தவர்களிடம் தனியார் தொலைக்காட்சி பேட்டி எடுத்தது. அப்போது பேசிய ஒரு சிறுவன் தற்போது பிரபலமாகி இருக்கிறார்.
சென்னையின் ரசிகரான அந்த சிறுவன் பேசுகையில், "இன்று மும்பை - சென்னை அணிகளுக்கும் இடையேயான போட்டியில் நிறைய சிக்சர்கள் வரும். அதை எல்லாம் பார்க்கலாம். இன்றும் ரோகித் ஷர்மா டக் அவுட் ஆனால் நல்லா இருக்கும். அடுத்து சென்னை இன்று போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டும்." என்று கூறினார்.
இந்த நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இதில் டாஸ் வென்று சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. தொடக்க வீரர்களான கேமரான் கிரீன் 6 ரன்களிலும், இஷான் கிஷன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இன்று 3 வது வீராக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா, ஏபிடி வில்லியர்ஸ்போல் 360 டிகிரியில் விளையாட முயன்று தீபக் சஹார் ஓவரில் ஸ்லிப் திசையில் நின்றுகொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மீண்டும் பூஜ்ஜியம் ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் ஷர்மா படைத்து உள்ளார்.

மும்பை அணி இதில் 20 ஓவர்களில் வெறும் 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரர் நேஹல் வதேரா 64 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களையே எடுத்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, அதிகபட்சமாக மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தற்போது எளிதான இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், ரோகித் ஷர்மா டக் அவுட் ஆக வேண்டும் என்று சொன்ன சிறுவனின் வீடியோ அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவனின் ஆசையை ரோகித் ஷர்மா நிறைவேற்றிவிட்டதாக அவரை கலாய்த்து பலர் பதிவிட்டு உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications