சென்னை ஷாக்.. விடாமல் காதலி கொடுத்த அந்த டார்ச்சர்.. விபரீதமான சதீஷின் காதல்!
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூரில் காதலியின் நடத்தை சரி இல்லை என்று காதலன் விலகிய நிலையில், தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காதலி டார்ச்சர் செய்ததால் அந்த காதலன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காதல் எல்லோருக்குமே இனிமையான நினைவாக இருக்கலாம். ஆனால் பலருக்கும் அது சோகமாக நினைவாக மட்டுமே இருக்கும். இதற்கு காரணம் பல காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை. திருமணத்தில் முடிந்த காதல்களைவிட திருமணத்தில் முடியாத காதல்களே சமுதாயத்தில் அதிகம்.
காதலி, காதலனை பிடிக்கவில்லை என்று வேறு கல்யாணம் செய்வதும், காதலியை பிடிக்கவில்லை என்று காதலன் வேறு கல்யாணம் செய்வதும் எல்லா இடங்களிலும் நடக்கிறது,

என்ன சிக்கல்
இதேபோல் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவும், வசதியான வாழ்க்கைக்காவும் காதலை தியாகம் செய்பவர்கள் ஏராளம். இதில் பிரச்சனைகள் வருவது இல்லை. ஆனால் அதேநேரம் காதலியின் நடவடிக்கையை சரியில்லை என்று காதலனோ, காதலனின் நடவடிக்கை சரியில்லை என்று காதலியோ பிரியும் போது, சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

டார்ச்சர்
அப்படி ஒரு சிக்கலை காதல் ஜோடி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சந்தித்துள்ளது. காதலியின் நடத்தை சரி இல்லை என்று காதலன் விலகி உள்ளார். ஆனால் .தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என டார்ச்சர் செய்ததால் அந்த காதலன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

25 வயது பெண்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், சிவன் கோயில் சந்து, தச்சர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(30), கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்து வரும் வேலை செய்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணை காதலித்து வந்தார்.

பிரிந்த காதலன்
பின்னர் அந்த பெண்ணின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அந்த பெண்ணை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது மேலும் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சதீஷ்குமாரை அவரது காதலி மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது

போலீஸ் விசாரணை
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சதிஷ்குமார் நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து குன்றத்தூர் போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காதலி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொல்லை கொடுத்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குன்றத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications