சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை பஸ் பாஸ்... மார்ச் மாதம் ஆயிரம் ரூபாய் பாஸ் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று முதல் சென்னையில் பேருந்துகள் ஓடத்தொடங்கிய நிலையில். மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அனுமதி அளித்துள்ளது.

 Chennai bus pass : Permission to use the thousand rupee pass taken in March in Chennai till Sep.15

சென்னை மாநகரபோக்குவரத்துக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, அடையாறு, அயனாவரம், வடபழனி, தி.நகர் உள்பட 28 இடங்களில் டெப்போக்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் தினசரி 3000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Recommended Video

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கம் - வீடியோ

    இதில் பயணம் செய்வதற்கு வசதியாக ரூ.1000 பாஸை போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பாஸை, அடையாறு, கோயம்பேடு, அம்பத்தூர, அண்ணாநகர் உள்பட 29 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாதமும் பஸ் பாஸ் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது. இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.

    பேருந்து போக்குவரத்து தொடங்கி.. முதல் நாளே இப்படியா.. சென்னையில் குழப்பம்.. என்ன நடக்கிறது?பேருந்து போக்குவரத்து தொடங்கி.. முதல் நாளே இப்படியா.. சென்னையில் குழப்பம்.. என்ன நடக்கிறது?

    இதையடுத்து 1000 ரூபாய் பாஸ் குறித்து ஆலோசனை நடத்திய அரசு, மார்ச் மாதத்தில் எடுத்த பாஸை வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதன்பிறகு புதிதாக பாஸ் எடுத்தால் போதும் என்றும் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் பாஸ் எடுக்காதவர்கள் புதிதாக பாஸ் எடுத்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai Metro Transport Corporation Permission to use the thousand rupee pass taken in March in Chennai till Sep.15
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X