தி நகர் முதல் தாம்பரம் வரை.. சென்னை பேருந்து நிலையங்கள்.. மொத்தமாக மாற போகுது.. என்னன்னு பாருங்க!
சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மெட்ரோ நிலையம், விமான நிலையம் போல பேருந்து நிலையங்களிலும் நேரத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் கடந்த சில நாட்களாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. இன்னொரு பக்கம் பழைய பேருந்து நிலையங்கள் பல வேகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன தோற்றத்திற்கு இந்த பேருந்து நிலையங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் கூடுதல் பயணிகளை கையாளும் விதத்திலும் இந்த பேருந்து நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன.
சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இப்போதெல்லாம் பலவற்றில் தகவல் பலகைகள் இல்லை. சில இடங்களில் போர்ட் மூலம் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவையும் கூட சரியாக இருப்பது இல்லை. பல தகவல் பலகைகள் துல்லியமான நேரங்களை கொடுப்பது இல்லை. பேருந்து எப்போது வரும், எப்போது புறப்படும், பேருந்து எங்கெல்லாம் செல்லும், பேருந்துகளின் ரூட்கள் என்னென்ன என்பது தொடர்பான எந்த விவரங்களும் துல்லியமாக இல்லை.
இந்த நிலையில்தான் சென்னை பேருந்து நிலையங்களில் துல்லியமான தகவல் பலகைகள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மெட்ரோ நிலையம், விமான நிலையம் போல பேருந்து நிலையங்களிலும் நேரத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
பேருந்து நிறுத்தங்கள் மற்றும் டெர்மினிகளில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தகவல் பலகைகள் மூலம் MTC பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். அதாவது லைவாக பேருந்து எங்கே வந்துள்ளது, எப்போது நம்முடைய இடத்திற்கு வரும் என்று கணிக்க முடியும். துல்லியமாக இது வருகை மற்றும் புறப்படும் நேரத்தைக் காண்பிக்கும். MTC தரப்பு அளித்த பேட்டிகளின்படி, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) நிதியுதவியுடன் சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பின் (CITS) ஒரு பகுதியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
சென்னை நகரத்தில் உள்ள 71 பேருந்து நிலையங்கள் மற்றும் 532 பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் தகவல் காட்சிகள் அமைக்கப்படும். இங்கே எளிதாக பயணிகள் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பட்டை தெரிந்து கொள்ள முடியும். பேருந்துகளில் உள்ள ஜிபிஎஸ் மூலம் இந்த பணிகள் எளிதாக முடியும். ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னை பஸ் ஆப் என்ற செயலியை வெளியிட்டு உள்ளது.
இதில் ஏற்கனவே பேருந்துகளை துல்லியமாக கணிக்கும் வசதி உள்ளது. இதை அப்படியே தகவல் பலகைகளில் கொண்டு வர முடிவு சேட்டுள்ளனர். போன் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இந்த பலகைகள் பயன் உள்ளதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த பலகைகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
136 கோடி ரூபாயில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக பலகைகளை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் இந்த பலகைகள் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications