அவங்க தப்பா பணம் போட்டுட்டு! என்னை மிரட்டுனாங்க.. ரூ 9000 கோடி டெபாசிட் குறித்து கார் டிரைவர் பேட்டி
சென்னை: என் அக்கவுன்ட்டில் ரூ 10000 இருந்தாலே என்னை கையில் பிடிக்க முடியாது. அப்படியிருக்கும் போது ரூ 9000 கோடி டெபாசிட் என்பதால் எனக்கு எதுவுமே புரியவில்லை என சென்னை கார் ஓட்டுநர் ராஜ்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்த பேச்சு இருந்து வருகிறது. ஏய் எப்புட்றா என கேட்க வைக்கும் சம்பவம்தான். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடம்பாக்கத்தில் தங்கி கார் ஓட்டுநராக இருந்து வருகிறார்.

இவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் 18 பைசா இருந்துள்ளது. ஆனால் திடீரென அவருக்கு வந்த குறுஞ்செய்தியில் ரூ 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதுபோல் வந்துள்ளது. இதை பார்த்த ராஜ்குமாருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் அந்த சைபரை ஒன்ஸ், டென்ஸ், ஹன்ட்ரட்ஸ் என திருப்பி திருப்பி எண்ணிக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்த 105 ரூபாய் 18 பைசாவுடன் அந்த தொகை சேர்ந்திருந்தது. இதுகுறித்து தனது நண்பருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் எதையும் ஓபன் செய்யாதே, ஏதாவது சைபர் கிரைம் மோசடி விவகாரமாக இருக்க போகிறது என எச்சரித்து கூடவே ஒரு ஐடியாவையும் கொடுத்துள்ளார்.
அதன்படி ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து யாருக்கேனும் பணம் அனுப்பி பார்க்குமாறு கூறியுள்ளார். அவரும் ரூ 21 ஆயிரத்தை அனுப்பி பார்த்துள்ளார். உடனே அந்த ரூ 21 ஆயிரம் டெபிட் ஆகி மீதம் இருக்கும் பணம் குறித்த தகவலும் வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தாலும் ராஜ்குமாருக்கு பயம் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியிலிருந்து ராஜ்குமாருக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய வங்கி அதிகாரிகள் பணம் தவறுதலாக வந்துவிட்டது. அதை நாங்கள் எடுத்துவிட்டோம் என கூறினர். இதையடுத்து ரூ 21 ஆயிரத்தை செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறினர்.
இந்த நிலையில் சில அதிகாரிகள் ராஜ்குமார் மீது போலீஸில் புகார் அளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் தனது வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு திநகரில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்தார். அங்கு அதிகாரிகள் ராஜ்குமாரிடம் நண்பருக்கு அனுப்பிய 21 ஆயிரத்தை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டாம். உங்களுக்கு கார் வாகன லோனுக்கு ஏற்பாடு செய்கிறோம் என கூறினராம்.
இந்த நிலையில் இதுகுறித்து ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், எனது வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் இருந்தது. ஆனால் கடந்த 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு என் கமக்கில் ரூ 9 ஆயிரம் கோடி டெபாசிட் ஆனது போல் மெசேஜ் வந்தது. 9 க்கு பக்கத்தில் அத்தனை பூஜ்ஜியங்கள் இருந்ததும் நான் அதிர்ந்து விட்டேன்.
என் நண்பரிடம் சொன்ன போதுதான் அவர் யாருக்காவது பணத்தை அனுப்பி பார் என்றார். நான் அனுப்பினேன். அந்த 21 ஆயிரம் பணம் டெபிட் ஆகி மிச்சம் இருக்கும் பேலன்ஸும் வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் மொத்தப் பணமும் டெபிட் ஆகி ஜீரோ பேலன்ஸ் காட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போது தூத்துக்குடி வங்கியில் இருந்து போன் வந்தது.
அப்போது பேசிய அதிகாரிகள் தவறுதலாக என் கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர். ஒரு பெண் அதிகாரியும் எனக்கு போன் செய்திருந்தார். அவர் நன்றாக பேசினார். ஆனால் தூத்துக்குடியில் இருந்து சிசிஓ என அறிமுகம் செய்து கொண்ட அதிகாரி, யாரை கேட்டு ரூ 21 ஆயிரத்தை நண்பருக்கு அனுப்பினீர், உங்கள் மீது எப்ஐஆர் போடுகிறேன் என்றார்.
உடனே நான் சார் நீங்கள் என் அக்கவுண்ட்டுக்கு எவ்வளவு பணம் போட்டீர்கள் என கேட்ட போது அந்த பணத்தின் தொகையை கூட அவர்கள் சொல்லவில்லை. இதையடுத்து பெரிய தொகையாக இருக்கிறது. நாளை வருமான வரித் துறையிடம் சிக்கினால் பிரச்சினை ஏற்படும், இதை போலீஸில் சொல்லிவிடு என்றார்கள். இதையடுத்து நான் பெண் அதிகாரியை தொடர்பு கொண்டு நானே போலீஸுக்கு போவதாக கூறினேன்.
அதற்கு அவர் வேண்டாம், எங்கள் வங்கி அதிகாரிகளுக்கும் பிரச்சினை ஏற்படும். நீங்கள் நேரில் திநகர் வங்கிக்கு வாங்க நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்,. நானும் என் வக்கீலுடன் 21 ஆயிரம் பணத்தை கட்டுவதற்காக எடுத்துச் சென்றேன். அப்போது அந்த பெண் அதிகாரி வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் கார் வாங்க கடன் தருகிறோம். அந்த பணத்தை அதற்கு தவணையாக கட்டிவிடுங்கள் என்றனர். என் அக்கவுண்ட்டில் 10 ஆயிரம் இருந்தாலே என்னை கையில் பிடிக்க முடியாது. இதில் அத்தனை பெரிய தொகை வந்ததும் எனக்கு பயம்தான் வந்தது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications