மத்திய சென்னை லோக்சபா தேர்தல் முடிவுகள்2024 LIVE: தந்தையின் சாதனையை முறியடித்த தயாநிதி மாறன்!
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார். மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் 4-வது முறையாக எம்பியாக வென்றுள்ளார் தயாநிதி மாறன்
மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் தயாநிதி மாறன் (திமுக) பார்த்தசாரதி(தேமுதிக) வினோஜ் செல்வம்பாஜக) டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் களம் கண்டனர்.

தொடக்கம் முதலே முன்னிலை வகித்த தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார்.
முடிவுகள் விவரம்:
தயாநிதி மாறன் (திமுக) 413848
வினோஜ் (பாஜக) 169159
பார்த்தசாரதி (தேமுதிக) 72016
கார்த்திகேயன் (நாம் தமிழர்) 46031
2 முறை வென்ற திமுகவின் தயாநிதி மாறனை 2014-ல் தோற்கடித்த மத்திய சென்னைதான் 2019-ல் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை 3-வது முறையாக வெல்ல வைத்தது. மத்திய சென்னையில் திமுகவுக்கான அபரிதமான செல்வாக்கை கடந்த தேர்தல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இம்முறை அதிமுக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடாமல் பாஜக, தேமுதிக களம் காண்பதும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு சாதகமாக அமைந்தது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
மத்திய சென்னை தொகுதி தேர்தல்களில் திமுகதான் அதிக முறை வென்றிருக்கிறது. 7 முறை திமுக, 2 முறை காங்கிரஸ், ஒரே ஒரு முறை அதிமுக, ஜனதா கட்சி வென்ற தொகுதி மத்திய சென்னை. திமுகவின் கலாநிதி, முரசொலி மாறன், காங்கிரஸ் மூத்த தலைவர் இரா. அன்பரசு ஆகியோர் வென்ற தொகுதி.
1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் முரசொலி மாறன். அவரது மகன் தயாநிதி மாறன் 2004, 2009 தேர்தல்களில் வென்றார். ஆனால் 2014 தேர்தலில் தயாநிதி மாறன் தோல்வியடைந்தார். 2019-ல் மீண்டும் வென்ற தயாநிதி மாறன் இம்முறை மீண்டும் வென்றுள்ளார்.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) - 3,16,329
பாலகங்கா (அதிமுக) - 1,82,151
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்( திமுக) 2,85,783
முகமது அலி ஜின்னா (அதிமுக)2,52,329
இராமகிருட்டிணன்(தேமுதிக)38,959
ஹைதர்அலி (மனிதநேய மக்கள் கட்சி) 13,160
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
விஜயகுமார்(அதிமுக) 3,33,296
தயாநிதிமாறன்(திமுக) 2,87,455
ரவீந்திரன்(தே.மு.தி.க)1,14,798
மெய்யப்பன்(காங்) 25,981
ஜெ. பிரபாகர் (ஆம் ஆத்மி)19,553
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்(திமுக) 4,48,911
சாம்பவுல்(பாமக) 1,47,391
கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்)
92,249 கார்த்திகேயன்(நாம் தமிழர் கட்சி) 30,886
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications