சாதாரண டிக்கெட் வாங்கி.. ரிசர்வ் பெட்டிகளில் ஏறி.. சென்னை சென்ட்ரலில் ஒரே அட்டகாசம்.. யாருனு பாருங்க
சென்னை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் முன்பதிவு செய்யாமலேயே, ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்பது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை ரெயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நெட்வொர்க் ரயில்வேயாகும்.. இதில் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகிறார்கள்.. இந்தியா போன்ற நாடுகளில், ரயில்வேயின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் பெருகியபடியே உள்ளது. இதற்கு காரணம், குறைவான கட்டணத்தில், பாதுகாப்பான, நிறைவான சேவையை பெறலாம்.. அத்துடன், நேரமும் பன்மடங்காக மிச்சப்படுத்தப்படுகிறது.
வசதிகள்: அதனால்தான், ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக ஏராளமான வசதிகளை செய்து வருகிறது.. குறிப்பாக சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நிறைய ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது... ஆனால், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாம்.
வடமாநிலங்களில் மட்டுமே இப்படியான சிக்கல்கள் எழுந்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் தென்பட துவங்கியிருக்கிறது.. மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக ஏறி இருக்கையை அபகரித்து கொள்கிறார்களாம்..
வடமாநிலத்தவர்: வடமாநிலத்தவர்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கான டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. நேற்றுமுன்தினமும் இப்படியொரு சம்பவம் சென்ட்ரலில் நடந்தது.
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளை ஏற்றுவதற்காக சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தது. அதில், S-3 பெட்டிக்காக ரிசர்வ் செய்யப்பட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் ரெயில், ஸ்டேஷனில் நிற்பதற்கு முன்பாகவே வடமாநிலத்தவர்கள், முன்பதிவு பெட்டியில் முண்டியடித்து கொண்டு ஏறிவிட்டார்கள். இதனால் ரிசர்வ் செய்தவர்கள், சீட் இல்லாமல் அவதிப்பட்டனர்.
18 பேர்: இதைவிட கொடுமை, ரிசர்வ் செய்த 18 பேர் அந்த ஏறமுடியாமல் தவித்தனர். கடைசிவரை அவர்களால் ஏற முடியாமல், வேறு வழியின்றி வீடு திரும்பி சென்ற அவலம் நேர்ந்துள்ளது.
ரிசர்வ் செய்தும் ரயிலில் போக முடியாவிட்டால் எதற்காக நாங்கள் ரிசர்வ் செய்வது? என்று கொந்தளித்து கேட்கிறார்கள் பயணிகள்? வடமாநிலம் செல்லும் ரெயில்களில் மட்டும்தான் இப்படியொரு அவலம் நடந்து கொண்டிருக்கிறது.
கொதிப்பு: ரிசவர்வேஷன் பெட்டிகளில், ரிசர்வ் செய்யப்படாதவர்கள் ஏன் ஏறுகிறார்கள்? வடமாநிலத்தவர்களை இப்படியே அனுமதித்தால், நாளடைவில் வடமாநிலங்களில் உள்ள ரெயில் பயணம்போல தமிழ்நாடு ரெயில் பயணம் மாறிவிடும். எனவே, தெற்கு ரெயில்வே இதுக்கு ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று நொந்து போய் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications