"செம ஹேப்பி!" செஸ் ஒலிம்பியாட் 2022..நாட்டுப்புற கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு வீரர்கள்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இதில் பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டு உள்ளனர்.
Recommended Video
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடக்க விழா
இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நகர் முழுவதும் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களை வரவேற்கத் தமிழக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை வந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு உள்ளதாகப் பாராட்டி வருகின்றனர். போட்டி ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ட்விட்டர் பக்கங்களில் பாராட்டி வருகின்றனர்.

நாட்டுப்புற கலைஞர்கள்
இதனிடையே தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்துள்ளனர். அவர்களை வரவேற்கத் தமிழக அரசு சார்பில் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞரின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனக் கலைஞர்கள் செஸ் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

குத்தாட்டம்
நாட்டுப்புற கலைஞரின் நடனத்தைக் கண்டு உற்சாகம் அடைந்த செஸ் வீரர்கள், அவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என பலரும் நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இன்று தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், போட்டிகள் அனைத்தும் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications