Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரோம்பேட்டை மக்களின் 16 வருட கனவு நிறைவேறுது.. ராதா நகர் சுரங்கப்பாதை திறப்பு எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எல்சி-27 ரயில்வே லெவல் கிராசிங்கில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிது இந்த சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 7-ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

25 வருடங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர் என்று சொல்லப்பட்ட குரோம்பேட்டை இன்று சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. குரோம்பேட்டையை தாண்டாமல் விமான நிலையமோ, ஓஎம்ஆர் சாலைக்கோ, ஈசிஆர் சாலைக்கோ, கிண்டிக்கோ யாருமே போக முடியாது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறது. ஓஎம்ஆர், ஈசிஆர், குன்றத்தூர் போரூர், தாம்பரம், சிட்லப்பாக்கம் என எல்லாமே இணையும் இடமாக குரோம்பேட்டை இருப்பதால் சுர வளர்ச்சி அடைந்தது.

Chennai chrompet Radha Nagar railway subway to be opened on January 7 by udhayanithi stalin

மக்கள் தொகையும் மிகமிக அதிகமாக உள்ளது. சென்னையில் திநகருக்கு அடுத்தபடியாக வணிக நிறுவனங்கள் எல்லாமே குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ளன. சின்ன தியாகராய நகர் போல் குரோம்பேட்டை மாறிவிட்டது. தாம்பரத்தின் வணிக மையமாக குரோம்பேட்டை தான் இன்றைக்கு இருக்கிறது.குரோம்பேட்டை என்பதை ரயில் நிலையத்தை அடிப்படையாக வைத்து கிழக்கு குரோம்பேட்டை, மேற்கு குரோம்பேட்டை என இரண்டாக இருக்கிறது.

கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. சாலை மற்றும் அவசர தேவைகளுக்கு மேற்கு குரோம்பேட்டை பகுதிகளுக்கு வரும் போது வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் மூடப்படும்.. இதனால் அவர்கள் நீண்ட தூரம் சுற்றி எம்.ஐ.டி. மேம்பாலம் அல்லது ரேடியல் சாலை மேம்பாலம் வழியாக வரவேண்டிய நிலை இன்று வரை தொடர்கிறதது. இந்நிலையில் ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. தினமும் ஒருலட்சம் பேர்பயன்படுத்தி வந்த இந்த பாதையை பல வருடம் முன்பே மூடிவிட்டார்கள். இங்கே ரயில்வே கேட்கள் மூடப்படும்போதெல்லாம், ராதா நகர் பிரதான சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். அடிக்கடி தாமதங்களும் விபத்துக்களும் ஏற்படுவது உண்டு.

இதனால் 2010-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போதும், தற்போதைய பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ. கருணாநிதி பல்லாவரம் நகராட்சியின் தலைவராக இருந்தபோது திட்டம் தொடங்கப்பட்டது.

திட்டத்தின் ரயில்வே தொடர்பான பணிகள் முடிக்கப்பட்ட போதிலும், அதிமுக ஆட்சியின் போது சுமார் ஒரு தசாப்த காலமாக இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மனுவைத் தொடர்ந்து, பணிகளை மீண்டும் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக, 2019-ஆம் ஆண்டு ரூ.17 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. இருப்பினும், 2021 வரை பணிகள் மந்தமான வேகத்திலேயே நடைபெற்றன. அதன் பிறகு, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தியது.

தற்போது 250 மீட்டர் நீளமும், ஏழு மீட்டர் அகலமும் கொண்ட இந்த சுரங்கப்பாதையின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மூன்று மீட்டர் அகலமுள்ள ஒரு நடைபாதை, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இருபுறங்களிலிருந்தும் குரோம்பேட்டை ரயில் நிலையம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களுக்கு பொதுமக்கள் நேரடியாகச் செல்ல வழிவகை செய்கிறது. முதல் முறையாக, பேருந்துகள் பயணிகளை ரயில்வே நடைமேடைக்கு அருகில் இறக்கிவிடும். இதனால் பயணிகள் நேரடியாக ரயில் நிலையத்திற்குள் நடந்து செல்ல முடியும்.

இதற்கிடையில், ஜிஎஸ்டி சாலையில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுரங்கப்பாதையை இருவழிப் போக்குவரத்திற்குத் திறப்பதற்கு தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் தெற்கு ரயில்வே ஆகியவை எழுப்பிய ஆட்சேபனைகள் குறித்து அறிந்த ராதா நகர் பகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சியை அணுகினர். இதையடுத்து ராதா நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கும், அங்கிருந்து ராதா நகருக்கும் இருவழிப் போக்குவரத்திற்காக சுரங்கப்பாதையைத் திறக்க தெற்கு ரயில்வே ஒப்புக்கொண்டிருக்கிறது.

இருவழிப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, கூடுதலாக 70 மீட்டர் நீளமுள்ள ரயில்வே நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு இடமளிக்கும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் ரயில்வே நடைமேடைக்கு ஐந்து மீட்டர் அருகில் மாற்றப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கப்பாதை ராதா நகர் மக்களின் பல வருடன கனவாகும். மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் மற்றும் பிற நிலையங்களில் சுரங்கப்பாதையும் நடைமேடைகளும் இணைக்கப்பட்டுள்ளதைப் போல, பயணிகளை சுரங்கப்பாதையிலிருந்து நேரடியாக ரயில் நிலைய நடைமேடைக்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் வயதான பயணிகளுக்கு உதவும் வகையில், நடைமேடையிலேயே ஒரு டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட வேண்டும்," என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+