சென்னை பஸ்களில் டிக்கெட் மெஷினில் திடீர் கோளாறு.. பயணிகள் இதை பண்ணாதீங்க.. பறந்த முக்கிய அட்வைஸ்
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் யுபிஐ, சென்னை ஓன் செயலி வழியாக தற்காலிகமாக டிக்கெட் எடுக்க முடியாது எனவும் எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்படும் வரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் எனவும் சென்னை எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். அலுவலகங்கள் செல்பவர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து அமைப்பாக நகர பேருந்துகளே உள்ளன.

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில், மெட்ரோ ரயில் என இல்லாத இடங்களுக்கும் சரி இருக்கும் இடங்களுக்கும் சரி.. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் மூலமே செல்ல முடியும் என்பதால் நகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். சென்னை நகர பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது.
நடத்துநர்களிடம் உள்ள டிக்கெட் இயந்திரத்தில் உள்ள கியு ஆர் கோடை ஸ்கேன் செய்து யுபிஐ வழியாக டிக்கெட் எடுக்கலாம். அதேபோல சென்னை ஒன் செயலி வழியாகவும் டிக்கெட் முடியும். இது பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு இன்று முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அதாவது, டிக்கெட் இயந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பழையபடி காகிதங்களில் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும்,
'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications