Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஏரிகள் எல்லாமே வேறலெவலில் மாறப்போகுது.. சிஎம்டிஏ சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புழல் ஏரி, பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி உள்பட 10 ஏரிகளை நீர் விளையாட்டுகள், படகு சவாரி வசதிகள், பூங்காக்கள், சைக்கிள் பாதை, வாடகை சைக்கிள் நிலையம், திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கம் உள்பட பல்வேறு வசதிகளுடன் மாற்றுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. இந்த அனைத்து ஏரிகளும் கால்வாய்களின் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக மற்றொரு ஏரிக்குத் தண்ணீர் போகும். அந்த ஏரியும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது.

அதைத் தொடர்ந்து ஆறுகள், குளங்கள் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக 21,464 ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளில் உள்ளன. இதனால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வெள்ளக்காடாக மாறுகின்றன.

நீர் நிலைகள்

நீர் நிலைகள்

இன்று சென்னையில் பெரும்பாலான ஏரிகளைக் காணவில்லை. அவற்றோடு இணைந்திருந்த கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் இருக்கும் ஏரிகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் நீர் நிலைகளை அழகுபடுத்தி, அதனை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், நடைபாதைகளுடன் மாற்றி வருகிறது. பல்வேறு நீர்நிலைகளின் கரைகள் சென்னையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

100 கோடி ரூபாய்

100 கோடி ரூபாய்

அதே பாணியில் சென்னை முக்கியமான ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நீர்நிலைத்துறை அமைப்புகளுடன் இணைந்து முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்படி 'ஏரிக்கரை மேம்பாடு' (lake front development) என்ற பெயரில் புதிய திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரிகளை மேம்படுத்தப்பட உள்ளது

புழல் ஏரி

புழல் ஏரி

என்னென்ன ஏரிக்கள் சீரமைக்கப்பட உள்ளது என்பதை இப்போது பார்ப்போம். பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கொளத்தூர் ஏரி, புழல் ஏரி ஆகிய 10 ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளது.

 படகு சவாரி

படகு சவாரி

இந்த ஏரிகள் புரனமைக்கப்பட்டு ஏரியைச் சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை, வாடகை சைக்கிள் நிலையம், திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கம், தோட்டம், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சிறுவர் விளையாட்டு திடல், திறந்த வெளி தியேட்டர், திறந்த வெளி அரங்கம், நீர் விளையாட்டுகள், மீன் பிடிக்கும் இடம், பறவைகள் பார்க்கும் இடம், மியாவாக்கி காடுகள், படகு சவாரி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+