சென்னையில் விபச்சாரம் நடத்தி சிக்கிய என்ஜினீயரிங் மாணவி.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் விபச்சாரம் தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: சென்னையில் விபசார தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கல்லூரி மாணவியுடன் சேர்ந்து அப்பாவி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய காதலன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை மாநகருக்கு இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் விபசார தடுப்பு பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி பாலியல் புரோக்கர்களை கைது செய்து வருகிறார்கள்.

சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

காப்பகத்தில் ஓப்படைப்பு
சோதனையில் அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. அந்த 3 பெண்களையும் போலீசார் மீட்டனர். அங்கு விபசார தொழில் நடத்தியதாக புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தரகர் ஜெயப்பிரதா (வயது 20), இன்னொரு தரகர் பிரேம்தாஸ் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள் மூவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

போலீசார் அதிர்ச்சி
இதனிடையே போலீஸ் கைதான ஜெயப்பிரதா குறித்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. சென்னையில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு படிக்கும் மாணவி தான் ஜெயப்பிரதா என்பதும், அவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலனோடு சேர்ந்து விபசார தொழில் செய்து வந்ததாகவும், தற்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

காதலன் எஸ்கேப்
கல்லூரி மாணவி ஜெயப்பிரதா பணச்செலவுக்காக அப்பாவி கல்லூரி மாணவிகள் பலரையும், விபசாரம் செய்ய வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இவரது காதலன் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவரை வலைவீசி தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications