கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை
Recommended Video

சென்னை: கனமழை எச்சரிக்கை எதிரொலியால் சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அவர் அறிவித்தார்.
சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று அவர் கூறியிருந்த நிலையில், இன்று பிற்பகல் முதலே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கியது.
நாளை மழையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மிலாது நபி காரணமாக நாளை ஏற்கனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது விடுமுறை விடாமல் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு கண்டிப்பாக நாளை விடுமுறை அளிக்க வேண்டும், என்பது இந்த உத்தரவின் சாராம்சமாகும்.
இதனிடையே, பல்வேறு கல்லூரிகளில் வரப்பெற்று வேண்டுகோள்படி கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 21 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து தேர்வுகள் ஓத்திவைக்கப்படுகிறது. ஓத்திவைக்கப்பட்ட தேர்வுகள் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் . மேலும் 26ஆம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என்று இன்று மாலை பாராதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜி. கோபிநாத் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications