கொடூர "சிரிப்பை" மறக்க முடியாது! சென்னையில் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! கல்லூரி மாணவி பரபர
சென்னை: நேற்றிரவு சென்னையில் இளம் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து உள்ளது.
இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலிலும் கூட வெளியே செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

பாலியல் அத்துமீறல்
இதற்கிடையே சென்னையில் இளம் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் பெண், "நானும் எனது நண்பரும் ஓஎம்ஆரில் அமைந்துள்ள ஐபிஐஎஸ் ஹோட்டலுக்கு திரும்பிய போது செல்வம் என்ற ஆட்டோ டிரைவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். ஹோட்டலின் முன்புறம் வைத்து அவன் எனது வலது மார்பை அழுத்தி அத்துமீறலில் ஈடுபட்டார்.

தப்பித்திவிட்டான்
எனது நண்பர் ஆட்டோவுக்கு பணம் செலுத்திக் கொண்டு இருந்தார். அப்போது நான் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது இந்த மோசமான சம்பவம் நடந்தது. அப்போது நான் கத்தினேன். மேலும், அந்த ஆட்டோ டிரைவரை தடுத்து நிறுத்தவும் நாங்கள் முயன்றோம். ஆனால், எப்படியோ அவன் தப்பித்துவிட்டான். நான் உடனடியாக போலீசாருக்கு கால் செய்த போதிலும் எந்த பதிலும் இல்லை.

எஃப்ஐஆர் இல்லை
சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர், இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹோட்டலுக்கு விசாரணை நடத்த வந்தார். ஸ்டேஷனில் பெண் அதிகாரி யாரும் இல்லை என்பதால், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் காலை வரை காத்திருக்க வேண்டும் எனச் சொன்னார். எஃப்.ஐ.ஆருக்கு பெண் அதிகாரி ஏன் எனக் கேட்டால் அது "அரசின் உத்தரவு என மட்டுமே பதில் அளித்தார். நேரில் சென்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய போலீஸ் ஸ்டேஷன் செல்லவும் அவர் எங்களை அனுமதிக்கவில்லை.

அனுமதிக்கவில்லை
இருந்த போதிலும், இரு ஹோட்டல் ஊழியர்களுடன் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்குச் சென்றோம். இருப்பினும், இரவு நேரத்தில் பெண்களை ஸ்டேஷனில் அனுமதிக்க மாட்டோம் என்றே அங்கு இருந்த ஸ்டேஷன் இன்சார்ஜும் தெரிவித்தார். இதன் காரணமாக நான் ஸ்டேஷனுக்கு வெளியே இருந்தபடியே புகார் அளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், எஃப்ஐஆருக்கு பதிலாக வெற்றுத்தாளை தான் புகார் அளிக்கக் கொடுத்தார்கள். (பொதுவாக பிரச்சினகைல தவிர்க்க போலீசார் எஃப்.ஐ.ஆருக்குப் பதிலாக இப்படி வெள்ளைத்தாளில் தான் புகார் அளிக்கச் சொல்வார்கள்.

அதிர்ச்சி
இன்று காலை 9 மணிக்கு லேடி போலீஸ் அதிகாரி வந்த பின்னர் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்கள். ஆனால் லேடி போலீஸ் அதிகாரி எண்ணையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர். இப்போது நான் ஆன்லைனில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளேன். அந்த ஆட்டோ டிரைவர் ஐபிசி 354 மற்றும் 506 பிரிவுகளில் தண்டிக்கப்பட வேண்டும். எனக்கு நேர்ந்தது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. என்னாலும் எனது நண்பராலும் இன்னும் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

சிரித்தான்
அவன் என்னிடம் அத்துமீறும் போது, நான் அவரைப் பார்த்துக் கத்தினேன். அப்போது 'சிரிக்கும்' துணிச்சல் அவனுக்கு இருந்தது. அவருடைய முகத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது" என்று பதிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் குறித்த தகவல்களையும் டிரிப் தகவல்களையும் இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.. இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்மந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போலீசார் விளக்கம்
இந்தச் சம்பவம் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை தேடி வருவதாகவும் போலீசர் பதிவிட்டு உள்ளனர். அதேபோல அந்த ஆன்லைன் டாக்ஸி நிறுவனமும் தேவையான தகவல்களைப் பகிர்ந்தால், சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications