ஈசிஆர் பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. குளிர்பானத்தில் மதுகலந்து.. பிளஸ் 2 மாணவியை.. பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவளம் பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிளஸ் 2 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்,

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தபோது கல்லூரி மாணவன் அதை வீடியோவும் புகைப்படமும் எடுத்து வைத்திருக்கிறார். இதை விசாரணையில் கண்டுபிடித்த போலீசார், அவரிடம் இருந்து இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பறிமுதல் செய்தனர்,.

சென்னை வியாசர்பாடி சத்யா நகரில் வசித்து வரும் சந்தோஷ்(19) ஒரு தனியார் காலேஜில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தோஷின் நண்பர் ஒருவருக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வந்தது.

தோழியுடன்

தோழியுடன்

இதனால் சந்தோஷ் நண்பர் கோவளத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்தார். பிறந்த நாள் விழாவிற்கு சந்தோஷ் உட்பட தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனாம்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியையும் அழைத்து சென்றிருக்கிறார்..

மதுபானம்

மதுபானம்

பண்ணை வீட்டில் நண்பரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, நண்பர்கள் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ஓட்ட சென்று விட்டனர். அப்போது சந்தோஷும் அவரது தோழியும் தனியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நீண்ட நேரம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். தனக்கு சாதமாக தனிமையை பயன்படுத்திய சந்தோஷ், குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

மாணவி குளிர்பானம் என்று நினைத்து மதுபானத்தை அதிகளவில் குடித்துவிட்டார் இதில் போதை தலைக்கேறி மாணவி தள்ளாடி உள்ளார். அப்போது சந்தோஷ் பண்ணை வீட்டில் உள்ள படுக்கை அறைக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார். மேலும் மாணவியை ஆபாசமாகவும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

மிரட்டி உள்ளார்

மிரட்டி உள்ளார்

பிறகு மாணவிக்கு போதை தெளிந்து நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மாணவியை மிரட்டி உள்ளார். அத்துடன் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உன் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் மாணவி பயந்து போனாராம்.

போலீசார் புகார்

போலீசார் புகார்

இதன்பின்னர் மாணவியை சந்தோஷ் தோனம்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் அருகே இரவு விட்டுவிட்டு சென்றிருக்கிறார். தனது மகள் காலையில் சென்றவள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்ததால் எங்கு சென்றாய் என்று அவரது தாய் விசாரித்து இருக்கிறார். ஏன் மிகவும் சேர்வுடன் இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது மாணவி அழுதப்படி நடந்த சம்பவத்தை அவரது தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய். உடனே சந்தோஷ் குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவர்.நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வீடியோக்கள் பறிமுதல்

வீடியோக்கள் பறிமுதல்

அந்த புகாரின் படி போலீசார் சந்தோஷை பிடித்து விசாரரித்ததில் உண்மை வெளிவந்தது. பிறந்த நாள் விழாவில் குளிபானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து, போலீசார் கல்லூரி மாணவன் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியுடன் ஒன்றாக இருந்த போது செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவியை கோவளத்திற்கு அழைத்து செல்ல உடந்தையாக இருந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+