அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைக்கலாம்... சென்னை மாநகராட்சி நிபந்தனை கிரீன் சிக்னல்!
சென்னை : திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த கருணாநிதியின் சிலையை நிறுவுவதற்கு சென்னை மாநகராட்சி நிபந்தைனையுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை நிறுவ அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது. சிலையை நிறுவுவதற்காக திமுக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கோரி இருந்தது.

இந்நிலையில் இன்று நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. இப்போது கருணாநிதி சிலையை வைத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் செய்ய இடம் தேவைப்பட்டால் சிலை அகற்றப்படும் என நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் அனுமதி கிடைத்ததையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 2ம் தேதி சிலை திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு தேசியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications