சென்னை மயிலாப்பூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தேவாலயம் 3 மாதத்தில் இடிக்கப்படும்.. மாநகராட்சி உறுதி
சென்னை: சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் உரிய திட்ட அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி பிலோமீனா ஷோஜனார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி, மயிலாப்பூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தேவாலயம் உள்ளிட்ட கட்டுமானங்கள் 3 மாதத்தில் இடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.. என்ன பிரச்சனை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையை பொறுத்தவரை மற்ற ஊர்களை விடவும் சொத்து மதிப்பு மிகஅதிகம்.. சொத்து மதிப்பு அதிகம் என்பதால், சென்னையின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் சர்வ சாதாரணமாக உள்ளன. சில பகுதிகளில் பல வருடங்களாக ஆக்கிரமிப்புகள் உள்ளன.

நீர்நிலைகள், சாலையோரங்கள், பூங்காக்கள், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது. இவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அரசு மீட்டு வருகிறது. அதிகாரிகள், கவுன்சிலர்களின் துணையுடன் அந்த காலத்தில் பத்திரப்பதிவு செய்த பலர் இன்று அவஸ்தை படுகிறார்கள்.. சாலைவழி ஆக்கிரமிப்புகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு அரசு பட்டா தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. அதேநேரம் சில பகுதிகளில் இன்று வரை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் கிறிஸ்துவ ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உரிய திட்ட அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி பிலோமீனா ஷோஜனார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், " மயிலாப்பூரில் தற்போது வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இடம். 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி வரை கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், மணிக்கூண்டு மற்றும் குடியிருப்புகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. எனவே ஏற்கெனவே அத்துமீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானங்களை இடிக்கவும், புதிதாக எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என தடையும் விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எம். சுரேஷ்குமார் ஆஜராகி சென்னை மாநகராட்சி 9-வது மண்டல அதிகாரி பி.எஸ்.ஸ்ரீனிவாசன் சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதி்ல், "எந்த அனுமதியும் பெறாமல் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கிறிஸ்துவ ஆலயத்தை சீரமைக்கும் நோக்கில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த கிறிஸ்துவ ஆலய கட்டுமானப்பணிகளை சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் கடந்த மார்ச் 22-ம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய திட்ட அனுமதி பெறாமல் புதிதாக சர்ச் கட்டுமானம், நுழைவு வாயில், மணிக்கூண்டு ஆகியவையும், சில குடியிருப்புகளும் என சுமார் 5 ஆயிரம் சதுர அடி அளவுக்கு எந்த அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து மணிக்கூண்டு கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எஞ்சிய சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் , 3 மாத காலத்தில் இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications