சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள்.. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில், மேயர் பிரியா பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இதில் சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும், கோடை காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை வசதி தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன.
வரும் 20 ஆம் தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது மேயர் பிரியா காலை 11 மணியளவில் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: -
* கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும்.
* சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை
* வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடி செலவில் தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும்
* ரூ.10 கோடியில் சென்னை பசுமை திட்டம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.
20 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம்
தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் வரும் 20 ஆம் தேதி நடைபெறும். விவாதங்கள் முடிந்த பிறகு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டுக்கு ரூ.8404 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு பட்ஜெட்
கடந்த ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி காலநிலை பட்ஜெட்டை வெளியிட்டது. மாநகராட்சியின் மொத்த மூலதன செலவீனத்தில், ரூ.1,341.2 கோடி ரூபாய் காலநிலை மாற்றத்திற்காக ஒதுக்கீடு செய்தது. இதில் 62.24 சதவீத நிதியானது நகர்ப்புற வெள்ளத் தடுப்பு, நீர் தட்டுப்பாடு பற்றாக்குறையை நீக்க ஒதுக்கப்பட்டது. திட்டக் கழிவு மேலாண்மை பணிகளுக்கு 26.15 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications