வெறித்தனம்.. வாயை மூடிட்டு இருக்கனும்! ராட்வீலரால் சீரியஸான சிறுமி! ஒனர்களுக்கு பறந்த எச்சரிக்கை..!
சென்னை: சென்னையில் 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவருடன் அவரது மனைவி சோனியா 5 வயது மகள் சுதக்ஷா ஆகியோர் அங்கேயே தங்கியிருந்தனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று ரகு விழுப்புரம் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகளும் மனைவியும் அங்கே இருந்தனர். இந்நிலையில் காலையில் பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி தான் வளர்க்கும் இரண்டு ராட்வீலர் வகை நாய்களுடன் பூங்காவுக்கு நடை பயிற்சிக்குச் சென்றார்.
நாய் தாக்குதல்: அப்போது சுதக்ஷாவை இரண்டு நாய்களும் கடித்துக் குதறின. அப்போது அதனை புகழேந்தி வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் புகழேந்தி வளர்த்த ராட்வீலர் வகை நாய்கள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட இனம் எனவும் இது தொடர்பாக அவரிடம் லைசன்ஸ் இல்லாதது தெரிய வந்தது. தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் பலர் இதுபோன்று நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து வருவதாக புகார் எழுந்தது.
சென்னை மாநகராட்சி: இந்நிலையில் ஐந்து வயது சிறுமியை கடித்து குதறிய இரண்டு ராட்வீலர் நாய்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும்.. வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்: மேலும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி அளிக்க வேண்டும், பூங்காவிற்குள் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு கொண்டுவர வேண்டும். இவை அனைத்தையும் அந்த பூங்காவின் காவலர் கடுமையாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை: இந்நிலையில் ஐந்து வயது சிறுமியை கடித்து குதறிய இரண்டு ராட்வீலர் நாய்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் நான்காவது சந்தில் இருந்து நேற்றிரவு இரண்டு நாய்களை மதுரைக்கு உரிமையாளர் புகழேந்தி எடுத்து சென்றுள்ளார் என சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹூசைன் தெரிவித்துள்ளார். இந்த நாய்களை அடுத்த 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் ஒட்டியிருந்த நிலையில் எடுத்து செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications