சென்னை மழை நீர் வடிகால்.. ககன்தீப் சிங் பேடி போட்ட ஒரே ஆர்டர்.. ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்
சென்னை : சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளில் தொய்வு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
Recommended Video
இதனால் சென்னை மாநகராட்சிக்காக பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்கள் ஆடிப்போய் உள்ளார்கள். மழை காலம் நெருங்குகின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகிறார்கள். உரிய காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்

மழை நீர் வடிகால்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது " மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 15ம் தேதி நடைபெற்றது.

நீர்வழிக் கால்வாய்
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பராமரித்து வரும் 2,071 கிமீ நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கிமீ நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2 லட்சம் அபராதம்
அதன் தொடர்ச்சியாக 3 ஒப்பந்ததாரர்கள், குறித்த காலத்துக்குள் பணிகளை மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்து வந்தது ஆய்வுக்கூட்டத்தில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆணையர் எச்சரிக்கை
இனிவரும் காலங்களில் பணிகளில் தொய்வு இருப்பின் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்" இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications