SIR.. வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்.. சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நடவடிக்கையாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கணக்கீட்டு படிவங்கள் நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவ உள்ளார்கள்.. இவர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும்போது என்ன செய்வார்கள்? வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நடவடிக்கை நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு 3 ஆயிரத்து 718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 1,859 மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணியாளர்கள் ள் வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும்போது என்ன செய்வார்கள்? வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குமரகுரபரன் ஐஏஎஸ் அளித்த விளக்கம் பற்றி பார்ப்போம்:-

"வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று 27.10.2025 அன்றைய தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தின் 2 நகல்களை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்குவார்கள்.
இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் மற்றும் வாக்காளரின் உறவினர் விவரங்களை சிரமமின்றி நிரப்புவதற்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை கொண்டு இந்த படிவத்தை நிரப்புவதற்கு உதவிடுவார்கள்.
கணக்கெடுப்பின்போது, வாக்காளரின் வீடு பூட்டியிருந்தாலோ அல்லது வெளியே சென்றிருந்தாலோ கணக்கீட்டு படிவங்களை வழங்குவதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவதற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 3 அல்லது 4 முறை வாக்காளர்கள் வீட்டுக்கு செல்வார்கள்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 கணக்கீட்டு படிவத்தில் ஒன்றினை தாங்கள் வைத்து கொண்டு, மற்றொன்றினை தங்களது வீட்டுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவத்துக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும்.
இந்த பணி வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரையில் நடைபெறும். எனவே, வாக்காளர்கள் எவ்வித பதற்றமுமின்றி தங்களது படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மேற்கண்ட தேதிக்குள் வழங்கலாம். இந்த படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்படும்" இவ்வாறு சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் கூறினார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications