கிளாம்பாக்கத்தையே சொல்லாதீங்க.. டோட்டலாவே "கலர்" மாறுது சென்னை.. சுற்றி சுழலும் மாநகராட்சி ஆபீசர்ஸ்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படுமோ? என்ற எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த சென்னைவாசிகளும் உள்ள நிலையில், மற்றொருபக்கம் சத்தமே இல்லாமல் அதிரடிகளை செய்து, சென்னை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது மாநகராட்சி.
மழை என்றாலே சென்னைவாசிகள் நடுங்கிப் போய்வார்கள்.. காரணம், மழைநீர் தேங்குவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக கலக்கம் தந்துகொண்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலமாகவே, சென்னையில் சாலை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் வேகமெடுத்துள்ளன.

மேயர் பிரியா: அந்தவகையில், பம்பரமாக சுழன்று சுழன்று பணிகளை மேற்கொண்டுவரும் சென்னை மேயர் பிரியாவின் செயல்பாடுகள், சென்னைவாசிகளிடம் பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த வருடம், சென்னையில் மழை வெள்ளத்தின்போது, நள்ளிரவு என்றும் பாராமல், ஸ்பாட்டுக்கே சென்று ஆய்வு நடத்தி அசரடித்தார்.. மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகள் மக்களை திரும்பி பார்க்க வைத்தன..
மழைநீர் வடிகால்: சமீபத்தில் கோடை பெய்த போதும், சென்னையில் எங்குமே மழைநீர் தேங்காத அளவுக்கு, வடிகால் நீர்வதிகள் செய்யப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையுமே திரும்பி பார்க்க வைத்திருந்தது. மழைநீர் வடிகால், சாலை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதால்தான், 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம், சென்னை மாநகராட்சியின் மண்டலங்களிலும் பலகட்டங்களாக நடந்தது..
அந்த நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "மழைநீர் வடிகால் மற்றும் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக அதிக புகார்கள் முகாமில் வருவதால், சென்னை மாநாகராட்சி இந்த இரண்டு புகார்கள் மீது அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியிருந்தார். அத்துடன், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் உறுதி தந்திருந்தார்..
அதிகாரிகள்: இதையடுத்து, சென்னையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தார். இப்போது அந்த பணிகள் முழுவீச்சில் நடந்துள்ளன.. மற்றொருபுறம், பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மற்றொருபுறம், மழைநீர் பகுதிகளை கண்டறிந்து, அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க 762 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மழைநீர் தேங்காத வகையில், சென்னை முழுவதுமே இந்த கால்வாய்கள் அமைக்கும் பணி துரிதமாகி உள்ளது..
IAS ராதாகிருஷ்ணன்: எப்படியும் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக்கூடும் நிலையில், மாநகராட்சிகள் பணிகளை அதிகரித்துள்ளனர். குறிப்பாக, நீர்நிலைகளை தூர்வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பது என விறுவிறுப்பான வேலைகள் நடக்கின்றன. இந்த பணிகளை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதிக்கு சென்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் மழைநீர் கல்வாய் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறார்.
வடகிழக்கு பருவமழையை சமாளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடந்தது.. இதில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், பழைய அனுபவங்களின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
அதேபோல, மக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் சிரமங்கள் ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும், நீர்நிலைகளில் ஆகாய தாமரைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அறிவுறுத்தல்: நிவாரண முகாம்களை கண்டறிந்து தயார் செய்து வைத்தல், மழைநீர் தேங்கினால் வெளியேற்ற மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருத்தல், பள்ளி - மருத்துவமனை உள்ளிட்ட கட்டங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தல், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி முன்கூட்டியே திட்டமிட்டு விழிப்புணர்வுடன் செயல்படுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications