சென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி
சென்னை: சென்னையில் 170 மி.மீ மழை பெய்த நிலையில் 6 மணி நேரத்தில் முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் தத்தளித்தன. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர்.

ஒரு ராட்சத மோட்டார் கொண்டு தண்ணீர் அனைத்தும் வடிய செய்யப்பட்டது. வெறும் 6 மணி நேரத்தில் 170 மி.மீ. மழை நீர் வெளியேற்றப்பட்டது. இந்த துரிதமான செயலுக்கு அனைவரும் மாநகராட்சி ஊழியர்களை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications