அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லையா? கஞ்சா கருப்பு போராட்டத்திற்கு மாநகராட்சி விளக்கம்- என்ன நடந்தது
சென்னை: போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனச் சொல்லி இன்று காலை நடிகர் கஞ்சா கருப்பு நோயாளிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போரூர் அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இன்று காலை இந்த மருத்துவமனையில் நீண்ட நேரமாகியும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

அப்போது நடிகர் கஞ்சா கருப்பும் அங்குக் கால் வலிக்காகச் சிகிச்சை பெற வந்த நிலையில், மருத்துவர்கள் இல்லாததால் அவர் நோயாளிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளக்கம்:
இதற்கிடையே போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே போராட்டத்தைக் கைவிட்டனர். இதற்கிடையே மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து மாநகராட்சி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் மூன்று டாக்டர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே காலதாமதமாக வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனால் சிறிது நேரம் மட்டும் சிகிச்சை பாதிக்கப்பட்டது. மூன்று மருத்துவர்கள் வந்த பிறகு வழக்கம் போல மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மருத்துவரே இல்லை என்பதில் உண்மை இல்லை என்றும் ஒரு மருத்துவர் மட்டுமே தாமதமாக வந்ததாகவும் அவரும் வந்தவுடன் சிகிச்சை அளிக்கும் பணிகள் வழக்கம் போல நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது:
இன்று காலை 7 மணி முதலே இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து ஓபி சீட் வாங்கி காத்திருந்துள்ளனர். காலை 10 மணி வரை கூட சிகிச்சை தர மருத்துவர்கள் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் அங்கு பணியிலிருந்த செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கால் வலி காரணமாகச் சிகிச்சைக்கு வந்த நடிகர் கஞ்சா கருப்பு, மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மருத்துவர்கள் இல்லை எனச் சொல்லி செவிலியர்களுடன் வாக்குவாதமும் செய்தார்.
கஞ்சா கருப்பு:
இது தொடர்பாக நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், "கால் வலிக்காக அரசு மருத்துவமனை வந்தேன். இங்கு என்னைப் பரிசோதித்த செவிலியர்கள் ஊசி எல்லாம் வேண்டாம்னு சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் இங்கு யாரும் இல்லை. தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரம் மருத்துவர்கள் இருக்கும் போது, அரசு மருத்துவமனையில் மட்டும் ஏன் மருத்துவர்கள் இருப்பது இல்லை.. அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நபர்களின் உயிர் என்றால் அலட்சியமா.
மண்டை உடைந்தும், நாய் கடித்தும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் போராடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதது வேதனை அளிப்பதாக இருக்கிறது. முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications