பல வருட ஏக்கம்.. சென்னையில் 2,995 சாலைகளில் நடந்த தரமான மாற்றம்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) 2,995 சாலைகளில் சீரமைப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் 479.41 கி.மீ நீளமுள்ள இந்த சாலைகள், அத்தியாவசிய பொதுப்பணிகளுக்காக பல்வேறு சேவை அமைப்புகள், அரசு அமைப்புகள், மாநகராட்சிகள் பிரிவுகளால் தோண்டப்பட்டிருந்தன.
முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 3,987 சாலை பணிகள், 648.75 கி.மீ நீளத்திற்கு ₹489.22 கோடி மதிப்பில் மேம்படுத்த திட்டமிடப்பட்டிருந்தன.

சென்னை சாலைகள் சீரமைப்பு
அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, 2025 மே 20 மற்றும் ஜூன் 20 தேதிகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. பெரும்பாலான பணிகள் இதுவரை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 15-க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சாலை தோண்டும் பணிகள் மெட்ரோ வாட்டர் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டன. இவை குடிநீர் குழாய்கள், கழிவுநீர் இணைப்புகள் மற்றும் மின் கேபிள்கள் பதிப்பதற்காக நடைபெற்றன.
தோண்டப்பட்ட சாலைகள்
இந்த ஆண்டு, 4,982 சாலைகளில் 859.98 கி.மீ தூரத்திற்கு தோண்டும் செய்ய மெட்ரோ வாட்டர் வாரியத்திற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது. இவற்றில், 3,266 சாலைகளில் (507.79 கி.மீ) பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் முடிந்து சீரமைக்க தயாராக உள்ளதாக 'தடையில்லா சான்றிதழ்' மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. இவற்றில் 2,976 சாலைகளை (476.89 கி.மீ) மாநகராட்சி ஏற்கனவே சீரமைத்துள்ளது. இதேபோல், டான்ஜெட்கோவுக்கு 30 சாலைகளில் (4.72 கி.மீ) பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் 19 சாலைகளில் (2.52 கி.மீ) சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சீரமைப்பு நடவடிக்கைகளை வாராந்திர அடிப்படையில் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். அவரது ஆலோசனைப்படி, செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து சாலை சீரமைப்பு பணிகளையும் முடிக்க கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் பல்வேறு சேவைத் துறைகளின் ஒப்பந்ததாரர்கள் சாலைகளைச் சேதப்படுத்திவிட்டு முறையாகப் பழுது பார்க்காததால், சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதாவது சென்னையில் சேதம் அடைந்த சாலைகளை இனி சென்னை மாநகராட்சியை சரி செய்யும்.
பொதுவாக சென்னையில் ஒரு இடத்தில் ஏதாவது காரணத்திற்காக குழி தோண்டப்படுகிறது என்றால் அந்த இடத்தை அதே துறை பழுது பார்ப்பார்கள். இவர்கள் சிமெண்ட் அல்லது மணல் மூலம் தோண்டப்பட்ட குழிகளை மூடுவார்கள்.
ஆனால் இவர்கள் இந்த பணிகளை சரியாக செய்வது இல்லை. இதனால் சென்னை மாநகராட்சி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளின்படி, சாலைகளைச் சேதப்படுத்தும் சேவைத் துறைகள் அனுமதி பெற்ற பின்னரே தேவையான கட்டணங்களைச் செலுத்தி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மெட்ரோ வாட்டர் டிபார்ட்மென்ட் மற்றும் டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) போன்ற சேவைத் துறைகள் சீரமைப்பு பணிகளை இத்தனை காலம் மேற்கொண்டன.
சாலை சீரமைப்பு பணிகள்
சென்னை மாநகராட்சி பொதுவாக முதலில் GSB (குழம்பு நிலை துணை அடித்தளம்), பின்னர் மணல், ஈரப்பத கலவை, தேவைப்பட்டால் M20 தர கான்கிரீட் மற்றும் பிட்டுமின் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சாலை வெட்டுக்கள் ஏற்பட்டால், ஒற்றை வெட்டுக்களுக்கு 3.5 மீட்டர் அகலம் மற்றும் 30 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட பிட்டுமினஸ் கான்கிரீட் (BC) பூச்சுடன் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதோடு, 40 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட BC பூச்சு மற்றும் குளிர் அரைத்தல் முறையும் பயன்படுத்தப்படும். கேபிள்கள் மற்றும் குழாய்கள் சாலை மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட வேண்டும். ஆனால், மற்ற துறைகள் ஈடுபடுத்தும் ஒப்பந்ததாரர்கள் இதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. அவர்கள் பைப்லைன் அல்லது கேபிள் வேலைகளுக்காகச் செய்த சாலை வெட்டுக்களை வெறும் குப்பைகளைக் கொட்டியோ அல்லது குறைந்த தர சிமெண்ட்டைப் பயன்படுத்தியோ மூடிவிடுகிறார்கள் என்று புகார்கள் வைக்கப்படுகிறது.
இப்படி சென்னையில் பல்வேறு சேவைத் துறைகளின் ஒப்பந்ததாரர்கள் சாலைகளைச் சேதப்படுத்திவிட்டு முறையாகப் பழுது பார்க்காததால், சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications