சென்னையே திணறுது.. களமிறங்கிய மேயர் பிரியா.. வாகன ஓட்டிகளுக்கு "ஆப்பு".. எகிறும் பார்க்கிங் கட்டணம்
சென்னை: சென்னை மாநகராட்சி, வாகன ஓட்டிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்து தந்து வருகிறது.. அத்துடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சில அதிரடி உத்தரவுகளையும் அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
வழக்கமாக சென்னை போன்ற மாநகரங்களில் டிராபிக் பிரச்சனையைபோலவே, பார்க்கிங் பிரச்சனையும் தீராமல் உள்ளது.. இந்த பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகத்தான், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் சமீபத்தில் அமைக்கப்பட்டன.

வணிக வளாகம்: தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக்நகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதைத்தவிர, பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலான இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருவதாக, 2 மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தன.
அந்தவகையில், இப்போதைக்கு, சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளது. சென்னை நகரில் மொத்தத்தில், வாகனங்களை நிறுத்த 500 பார்க்கிங் இடங்கள் உள்ள நிலையில், மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.65 லட்சம் வருமானம் இந்த பார்க்கிங் கட்டணத்திலிருந்து வருகிறது. பார்க்கிங் இடங்களில் கார்களுக்கு 1 மணிநேரத்துக்கு ரூ.20-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5- ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வாகன நிறுத்த கட்டணம்: தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாகன நிறுத்த கட்டணம் 1 மணிநேரத்துக்கு ரூ.60-ஆக உயர்த்தப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்த நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் பார்க்கிங் இடங்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம்.
அநேகமாக, அடுத்த மாதம் வணிக பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் பார்க்கிங் இடங்களை கண்டறியும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.. அதற்கு பிறகுதான், பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேயர் பிரியா: இதனிடையே, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பார்க்கிங் மேலாண்மை முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.. அப்போது சாலைகளில் அதிக அளவில் பார்க்கிங் அமைப்பதற்கான இடங்களை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதுமட்டுமல்ல, சாலை ஓரங்களில் ஏற்கனவே உள்ள பார்க்கிங் பகுதிகளில் 130 வாகனங்கள் கேட்பாரற்று உள்ளதால், இதற்காக 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.. யாருமே அதற்கு உரிமை கோராவிட்டால், அந்த வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications