Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வாங்க.. ஆர்என் ரவியை விளாசிய சென்னை மேயர் பிரியா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது பற்றிய கேள்விக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்து நேரில் பாருங்கள் என்று மேயர் பிரியா, ஆளுநர் ஆர்என் ரவிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மேயர் பிரியாவிடம், ‛‛வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி கருத்து தெரிவித்துள்ளார். சென்னையின் பெண் மேயராக உங்களின் கருத்து என்ன?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

governor rn ravi priya chennai mayor

அதற்கு சென்னை மேயர் பிரியா, ‛‛சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரமாக சென்னை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிற மாநகரங்களை பார்க்கும்போது 2022ல் சென்னை தான் பெண்களுக்கு பாதுகாப்பான சிட்டி என்ற அங்கீகாரம் கிடைத்தது.

அதுமட்டும் இல்லை சென்னை மாநகராட்சியில் ஜெண்டர் அண்ட் பாலிசி லேப் எனும் பிரிவு உள்ளது. இதன்மூலம் சென்னையில் எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது. போக்குவரத்து, பொது இடங்களில் எந்த மாதிரியான நெருடல்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு தேவையான தீர்வுகள் குறித்து ஓராண்டாய் ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம்.

முதல்வர் இப்போது பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆளுநர் மாளிகையிலேயே இருந்து கொண்டு இதுபோன்ற விமர்சனங்களையும், தேவையில்லாத சர்ச்சையையும் கூறுவதை விட்டு விட்டு பெண்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்தும் உள்ளது. பெண்களுக்கான ஆட்சி எந்த அளவுக்கு இருக்கு? பெண்களுக்கான திட்டங்கள் எந்த அளவுக்கு இருக்கு?. பெண்களுக்காக முதல்வர் கொண்டு வரும் திட்டங்கள் என்ன? அந்த திட்டங்களால் பயனடையும் பெண்கள் எவ்வளவு பேர்? என்பதை நேரில் வந்து பார்க்கும்படி ஆளுநரை கேட்டு கொள்கிறேன்'' என்று கூறினார்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூரையொட்டிய பொடவூர் பகுதியில் அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ரவி, பெண்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பெண்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாக இல்லை என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛சென்னை பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். பட்டமளிப்பு விழாக்களில் என்னை சந்தித்து பேசும் மாணவிகள், சென்னை பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று தங்கள் பெற்றோர்கள் கூறுவதாகவும், சென்னைக்கு அனுப்ப தயங்குவதாகவும் தெரிவித்து உள்ளனர். எனவே சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு, சென்னை மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+