தெரு தெருவாக ரெய்டு விட்ட அதிகாரிகள்.. சென்னையில் மாநகராட்சி எடுத்த முக்கிய ஆக்சன்.. மிரண்ட மக்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 247 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன.
சென்னைக்கு புதிய முகம் கொடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உயர் அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி, புதிய சாலைகள், போஸ்டர் ஒட்ட தடை, கூடுதல் பாலங்கள் என்று சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பூங்காக்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.
அதிரடி நடவடிக்கை: உருமாறும் சென்னை:முக்கியமாக சென்னையின் பல்வேறு பீச்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கும் அல்லது மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல தெருக்களுக்கு ஜாதி ரீதியான பெயர்கள் உள்ளன. வன்னியர் தெரு, ஜிஎன் செட்டி ரோடு என்று பிரபல சாலைகள் பல உள்ளன.
இப்படி ஜாதி ரீதியான பெயர்கள் பல்வேறு தெருக்களின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் வளர்ந்த ஒரு நகரம்.. ஜாதி பெயரை சுமந்து நிற்பது என்பது சரியாக இருக்காது. ஒரு சாலை அனைவருக்கமானதாக இருக்க வேண்டும். மாறாக சாதி பெயரை சுமந்து நின்றால், அது வேற்றுமையை குறிக்கும் இடமாக மாறிவிடும். அதிலும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் ஜாதி பெயர்களுடன் சாலைகள் இருப்பது நல்ல விஷயம் கிடையாது. இதனால் இந்த பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக ஜாதி பெயர்களை நீக்கினால் அது பல்வேறு தரப்பினர் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தும். இவற்றை மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
போஸ்டர்கள்; இந்த நிலையில்தான் சென்னையில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை முழுக்க போஸ்டர்கள் நிரம்பி வழியும் நிலையில் சென்னையின் அழகையே அது கெடுக்கிறது. இந்த நிலையில்தான் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 247 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன.
கடந்த 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த ஆய்வில் பொது இடங்களில் இருந்த 203 விளம்பர பலகைகள், கடைகளில் இருந்த 44 விளம்பர பலகைகளும் அகற்றம் செய்யப்பட்டு உள்ளன. அரசியல் கட்சி பலகைகள் , அரசு நிறுவன பலகைகள் என்று பலவும் அகற்றப்பட்டு உள்ளன.
ஏற்கனவே சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருக்களிலும் புதிய போர்ட் வைக்கும் போதே, ஜாதி பெயர்களையும் சேர்ந்து நீக்கி வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன. இதில் ஜாதி ரீதியாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. இவை மாற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக அடையாற்றில் அப்பாவு கிராமணி என்ற பெயரில் ஜாதி பெயரான கிராமணி நீக்கப்பட்டு உள்ளது.
இந்த மாற்றம் வெற்றிகரமாக செய்யப்பட்ட நிலையில், தற்போது போஸ்டர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications