Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்ப்பரேஷன் பள்ளி அல்ல; கார்ப்பரேட் ஸ்கூல் - ஸ்டாலின் செய்த சரியான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'அரசுப் பள்ளியா? வேண்டாம்பா' என்றது அந்தக்காலம். ' நம்ம அரசுப் பள்ளியா?' என வாய்ப்பு கேட்டுப் பெற்றோர் நிற்பது இந்தக் காலம். அந்தளவுக்கு ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பின் அதிநவீன மாற்றங்களை அடைந்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

பெயிண்ட் அடிக்காத பழைய கட்டடம், சுகாதாரமற்ற கழிப்பறைகள், குப்பைகள் கொட்டிக் கிடக்கும் வகுப்பறைகள் எனப் பார்க்கவே பரிதாபகரமாகக் காட்சி அளித்துவந்த அரசுப் பள்ளிக்கூடங்கள் இந்த ஆட்சியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஏசி வசதிகள், கண்காணிப்பு கேமிராக்கள், மாடர்ன் மேசை நாற்காலிகள், தரமான கம்ப்யூட்டர்கள், இலவச இணையச் சேவை, வண்ணமயமான சுவர் ஓவியங்களுடன் கூடிய வகுப்பறைகள் எனப் பல புதுமைகளைக் கண்டிருக்கிறது.

 Chennai Corporation School converted to Corporate School status

இந்தத் திமுக ஆட்சியில், தரமான உட்கட்டமைப்பு, சிறப்பான கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சியை மேம்படுத்தல் எனப் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அரசு முதற்கட்டமாகச் சென்னையிலுள்ள 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் அறைகளாக தரம் உயர்த்தியுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 Chennai Corporation School converted to Corporate School status

இந்த மாற்றங்களைச் சென்னை பெருநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து சென்னைப் பள்ளிகளில் செயல்படுத்தி வருகின்றன. இதற்காக 56 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பீட்டில் மற்றும் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 28 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிதியின் மூலம், இப்போது புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது திருவிக மண்டலத்தில் நம்மாழ்வார் பேட்டை அமைந்துள்ள சென்னை உயர்நிலைப்பள்ளிதான்.

 Chennai Corporation School converted to Corporate School status

இப்பள்ளி அடைந்துள்ள மாற்றம் கொஞ்சம் நஞ்சம் அல்ல; வகுப்பறைக்குள் செல்லும் போது மாணவர்களின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கார்ப்பரேஷன் பள்ளியை ஒரு கார்ப்பரேட் பள்ளி அளவுக்கு மாற்றிக் காட்டி இருக்கிறார் ஸ்டாலின்.

இந்த மாற்றம் எப்படி?

"இந்த ஆட்சியில் நமது அரசாங்கம் கல்விக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத்தை மாற்றக் கூடிய மிகப்பெரிய சக்தி கல்விக்குத்தான் இருக்கிறது என்று இந்த அரசாங்கம் வலிமையாக நம்புகிறது. ஒரு தனிமனிதனின் படிப்பறிவு வளர்ந்துவிட்டால், நிச்சயம் அந்தக் குடும்பம் உயர்ந்துவிடும்.

குடும்பம் உயரும்போதே சமுதாயம் சேர்ந்தே உயர்ந்துவிடும். அப்புறம் நாடே செழிப்பாகிவிடும். ஆகவேதான் ஒரு தனி நபரின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களான நாங்கள் பாடுபடுகிறோம். நாங்கள் மட்டுமே பாடுபட்டால், பலன் கிடைக்காது. அரசாங்கம் உறுதுணையாக இருந்தால் அது முடியும்.

 Chennai Corporation School converted to Corporate School status

அந்தவகையில் இந்தப் புதிய அரசுக் கல்விக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று அரசு வழிகாட்டுகிறது. அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்தி வருகிறோம்.

அதன் முதல்கட்டமாக ஸ்மார்ட் டிவி வகுப்பறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள். ஏறக்குறைய 10 பள்ளிகள் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளன. அதில் எங்கள் பள்ளியும் ஒன்று. கிரேட்டர் சென்னை கார்பரேஷன் மற்றும் Torrent gas private limited இந்த இரண்டும் இணைந்து இதற்கு நிதி அளித்துள்ளன. அதைக் கொண்டு வகுப்பறை மிகச் சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது.

 Chennai Corporation School converted to Corporate School status

இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்காக 65 inches tv வழங்கப்பட்டுள்ளது. 20 Dual desk க்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறை செயல்படும் அறைக்குள் ஒரு வருடத்திற்கு வைஃபை வசதி தந்துள்ளார்கள்.

'நமக்கு நாமே திட்டம்' , 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்', 'சிங்கார சென்னை திட்டம்', 'நிர்பயா நிதி' ஆகிய திட்டங்கள் வழியே நிதி வந்தடைகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். ஆகவே இது ஒரு சிறப்பான திட்டம். இதன் மூலம் பல பிள்ளைகள் வாழ்க்கை மேம்பட்டுவருகிறது.

பல ஏழைக்குடும்பங்கள் தங்களின் பிள்ளைகள் சரியாகப் படிக்கிறார்களா? அவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் சரியாக இருக்கிறதா? அவர்களின் தேவைக்கு வேண்டியவை கிடைக்கிறதா என பெரும்பாலும் கவனிப்பதில்லை. அந்தக் குழந்தைகள் முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்களை நம்பியே படிக்கிறார்கள். அவர்களை ஆசிரியர்கள் மட்டுமே கண்காணிக்கிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளின் வாழ்வுக்கு இந்த நிதி போய்ச் சேர்ந்து மாற்றத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

 Chennai Corporation School converted to Corporate School status

முன்பு எல்லாம் சாலையை மேம்படுத்துவது, பூங்காக்களை உருவாக்குவது என அரசின் நிதி முழுக்க அந்தப் பக்கமே அதிகம் சென்றுகொண்டிருந்தது. இப்போது அந்த நிலை மாறி, அரசுப் பள்ளிகளின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தித் தந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை.

"சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வருகின்ற அரசுப் பள்ளி அனைத்துமே தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். " என்கிறார் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி.

சென்னை மாநகராட்சியின் கீழ் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. அதில், 36 மேல்நிலைப் பள்ளிகள். 38 உயர்நிலைப் பள்ளிகள். 92 நடுநிலைப் பள்ளிகள். 115 தொடக்கப்பள்ளிகள். மொத்தமாக 98 ஆயிரத்து 633 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கான ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 3013.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தரம் உயராமல் இன்றும் பழங்கால நடைமுறையில் பாடம் நடத்தப்பட்டு வரும் அரசுப் பள்ளிகளைத் தனியார்ப் பள்ளிக்கு இணையாகத் தரம் உயர்த்த திட்டமிட்டார்.

அதைப்பேலவே ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், கூடவே மாணவர்களின் கற்றல் திறனையும் சேர்த்து உயர்த்த வேண்டும் என்று விரும்பினார்.

அதுவும் இந்த மாற்றத்தைத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தவேண்டும் எனக் கனவு கண்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கருவிகளைப் பொருத்த முடிவெடுத்தார்.

இதன் கூடவே நிர்பயா நிதியின் மூலம் பெண் பிள்ளைகளின் கழிப்பறைகளின் சுகாதாரத்தை உறுதிசெய்ய முடிவு செய்தார். அதனைச் செயல்படுத்தத் திட்டம் தீட்டி, செயல்படுத்தியும் காட்டியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க, கடந்த நவம்பர் 2022 ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்துள்ளன" என்கிறார்

மேலும் தொடர்ந்து பேசிய தாயகம் கவி, "ஏதோ இப்போதுதான் முதல்வர் ஸ்டாலின் இதைப்போன்ற நவீன வசதிகளை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை.

இதற்கு முன்பாகவே 1996இல் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் மாநகராட்சியில் தகவல்தொழில்நுட்பம் வசதிகள் அளவில் மிகவும் பின் தங்கி இருந்தது. தனியார் நிறுவனங்களின் உதவியுடன் அரசுப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்திக் காட்டினார். ஆக, அன்றே இதற்கான விதையை ஸ்டாலின் போட்டுவிட்டார்.

அதற்கு முன்னதாக அரசுப் பள்ளியில் படிக்கவைக்கப் பெற்றோர்கள் முகம் சுளித்தனர். ஆனால், இந்த மாற்றங்களுக்குப் பின்னர் அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குப் பரிந்துரைக் கடிதத்தை, நாடாளுமன்ற உறுப்பினரிடமோ அல்லது எம்.எல்.ஏவிடமோ வாங்கவேண்டும் என்ற சூழலை ஸ்டாலின் உருவாக்கிக் காட்டினார்" என்கிறார்

மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக இந்த அரசு 'பவர் ஃபைனாஸ்' திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. அரசுப் பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு வருடா வருடம் 5 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார்கள். இந்தப் பள்ளியில் 12 நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+