கனமழை அலர்ட்.. 24 மணி நேரமும் தயாராக இருங்கள்.. மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை
சென்னை: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடந்த மழைப் பொழிவின்போது நீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டர்களையும் கையிருப்பில் வைத்திருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை புயலாக மாறுகிறது. இதனால் தமிழகத்தில் 8, 9 ,10 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 9ஆம் தேதி அதி கனமழைக்கான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

காற்றழுத்தம் எங்கே ?
தற்போது காற்றழுத்தமானது சென்னையிலிருந்து 770 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. இது மிகவும் வேகமாக மேற்கு, வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் கனமழையை எதிர்கொள்ள தயார் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள், கிளைகள் அகற்றப்படுவதை மண்டல அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மர அறுவை எந்திரம், மரங்களை வெட்டி அகற்றும் எந்திரம் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை பொழிவு
கடந்த மழைப் பொழிவின்போது நீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டர்களையும் கையிருப்பில் வைத்திருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில் 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

24 மணி நேரம்
மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அகற்றப்படுவதை மண்டல அளவிலான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பருவமழை துவங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இயந்திரங்கள் ஏதேனும் பழுதடைந்திருப்பின் உடனடியாக பழுது நீக்க வேண்டும்.

மழைநீர் வடிகால்கள்
மழைநீர் வடிகால்களில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள், போதுமான மருந்துகள் இருப்பு இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அது போல் வெள்ளம் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் நீச்சல் வீரர்கள் தயாராக இருக்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications