சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு! மெரினா கடற்கரை தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க பிளான்!
சென்னை: சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை ஆகிய ஐந்து கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 11.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகளை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், சென்னை மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அதிக அளவில் குப்பைகள் சேகரமாகிறது.

இதேபோன்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, புது கடற்கரை இந்த கடற்கரைகள் சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் குப்பைகள் சேகரமாகிறது. எனவே கடற்கரைகளை பகுதிகளாக பிரித்து சுத்தம் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த பணிக்காக வாகனங்கள் வாங்கவும் ஊழியர்களை நியமித்து செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரையை சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணிகளை ரூ .7 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளையும் சுத்தம் செய்ய ரூ 4 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.மொத்தம் ரூபாய் 11 கோடி 50 லட்சம் செலவில் சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில் அளித்தார். 117 தீர்மானங்கள் இந்த மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தொழில் உரிமை கட்டணத்தை குறைக்கும் விதமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தொழில்களுக்கும் தொழில் உரிமை கட்டணம் 2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆயிரம் சதுர அடிக்கு தொழில் உரிமை கட்டணம் ரூ.3500 என்று இருந்ததை 500 சதுர அடிக்கு ரூ. 1200 எனவும், 501 முதல் ஆயிரம் சதுர அடி வரை ரூ 3500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 500 சதுர அடி வரை உள்ள மளிகை கடை உரிமையாளருக்கு தொழில் உரிமை வரி ரூ.2300 வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications