சட்டவிரோத பண பரிமாற்றம்: நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்- குற்றச்சாட்டுகள் பதிவு!
சென்னை: சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பதிவு செய்தார். இதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு போராடி வருகிறார் செந்தில் பாலாஜி.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு விசாரணையையே தொடங்காத நிலையில் இதே வழக்கின் கீழ் அமலாக்கத்துறை எப்படி விசாரணையை தொடங்க முடியும் என்பது உச்சநீதிமன்றத்தின் கேள்வி. ஆகையால் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் கூடாது என வாதிட்டார்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்போ, மத்திய குற்றப் பிரிவு வழக்குக்கும் அமலாக்கத்துறையின் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகாதது குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். இதனால் குற்றச்சாட்டுகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிவு செய்வது தொடர்பாக நீதிபதி அல்லி இருதரப்பிடமும் கருத்து கேட்டார். இதற்கும் செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை நிராகரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 8-ல் (இன்று) நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்; அப்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்டு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது நீதிபதி கேட்ட கேள்விக்கு, தம் மீதான இந்த வழக்கு பொய்யானது என செந்தில் பாலாஜி பதிலளித்தார். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications