சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி.. நேரில் ஆஜரானதால் உத்தரவு வாபஸ்!
சென்னை: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல ஆஜராகாத சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை இன்று திரும்பப் பெற்றது.
ரத்தினசபாபதி என்பவர் தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு முறையான திட்ட அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார், இந்த வழக்கில் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என சம்மன் பிறப்பித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.
ஆனால் அந்த சம்மனை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தரப்பில் வாங்க மறுத்து விட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி ராஜ்குமார், இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க வராத சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து இன்று (ஜூலை 18) நேரில் ஆஜர்படுத்த நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். தொடர்ந்து சி.எம்.டி.ஏ உறுப்பினர் சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை. நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும், கிடைத்திருந்தால் உரிய பதில் அளிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்து வழக்கு தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
எனவே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜ்குமார், கைது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார். பின்னர் வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications