இந்தியாவிலேயே மிகப்பெரியது.. 2023ல் சைலண்ட்டாக சாதனை செய்த சென்னை.. வாயை பிளக்கும் பெங்களூர், மும்பை
சென்னை: 2023ல் செய்யப்பட்ட முதலீடுகளில் சென்னை மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய சாதனை என்று சொல்லும் அளவிற்கு பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளது.
2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னையில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நான்கில் ஒரு பங்கிற்கு மேல் பெங்களூரில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் சென்னை 2 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு.. மிக அதிக அளவில் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர்.
இதன் அர்த்தம் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் சென்னை முதல் முறையாக முதல் 3 இடங்களுக்குள் வந்தது என்று Colliers India அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4.6 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்த சென்னை 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்துள்ளது. 131 சதவிகிதம் வளர்ச்சியை சென்னை கண்டுள்ளது. 16.2 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை விற்ற பெங்களூர் 15.6க்கு மட்டும் விற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் மூலம் 4.20 சதவிகிதம் சரிவை பெங்களூர் சந்தித்துள்ளது.
சென்னை மட்டும்தான் 131 சதவிகிதம் வளர்ச்சியை கண்டுள்ளது. விரைவில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவில் சென்னை முதலிடம் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதிரடி சாதனை: இதில் 2023ல் செய்யப்பட்ட முதலீடுகளில் சென்னை மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய சாதனை என்று சொல்லும் அளவிற்கு பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளது.
தரமணியில் இருக்கும் டிஎல்எப் டவுனில் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனம் 1,100,000 சதுர அடி அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்தது. இதுதான் இந்தியாவிலேயே இந்த வருடம் ஒரு நிறுவனம் குத்தகைக்கு அல்லது வாங்கிய மிக பெரிய அலுவலக இடம் ஆகும். 2023ல் மட்டுமின்றி.. சென்னையின் அலுவலக வரலாற்றிலேயே செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடு இதுவாகும். சென்னையின் பொருளாதார சூழ்நிலை சிறப்பாக இருப்பதை காட்டும் விதமாக இந்த முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
நம்பர் 1 : முதலீடு: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications