இந்தியாவிலேயே முதல்முறை.. பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் செல்வோருக்கு.. நாளை செம சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக, பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைக்கும் "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்த செயலியை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) உருவாக்கியுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் செயலி CUMTA-வின் இரண்டாவது ஆணையக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் இந்த செயலியைத் தொடங்குவதோடு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலையான போக்குவரத்தை உறுதிசெய்யும் விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கும் (CMP) ஒப்புதல் அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Bus metro metro chennai

சென்னை ஒன்

"சென்னை ஒன்" செயலியின் மூலம், பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில், கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா போன்ற போக்குவரத்து சேவைகளுக்கு ஒரே QR குறியீடு கொண்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம். பேருந்துகள் மற்றும் ரயில்களின் நேரலை விவரங்களையும் பயணிகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

"டிக்கெட்டுகளை UPI கட்டணங்கள் மூலம் வாங்க முடியும். இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பிற மொழிகளை ஆதரிக்கும். இந்தச் செயலி தொடங்கப்பட்ட பிறகு, டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் பயணிகளுக்கு இருக்காது" என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செயலி சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகள் (MTC), நம்ம யாத்ரி ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். இதன் மூலம் அனைத்துப் போக்குவரத்து முறைகளுக்கும் ஒரே தளத்தில் டிக்கெட் பெறும் வசதி கிடைக்கும்.

ஆரம்பக் கட்டத்தில் மெட்ரோ, MTC பேருந்துகள், நம்ம யாத்ரி ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் ஆகியவை இணைக்கப்படும். அதைத் தொடர்ந்து, MRTS மற்றும் புறநகர் ரயில்களும் இந்தச் செயலியுடன் இணைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் அனைத்துப் போக்குவரத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் முதல் நகரமாக சென்னை திகழும்.

சென்னை ஒரே டிக்கெட்

சென்னையில் மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் அறிமுகம் செய்கிறது CUMTA. இந்த செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் APP-ல் இடம் பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் விடப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடிந்துள்ளன.

QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம். அதில் நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+