நைட் கிளப் டான்சர் அட்டகாசம்.. கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க சொல்லி.. சென்னை வடபழனியில் பரபரப்பு
சென்னை: பெண் ஒருவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, வடபழனி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?
சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நள்ளிரவு 1 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையிலேயே வந்தார்.. அங்கிருந்த பெண் போலீஸிடம் "என்னுடைய ஆண் நண்பர், என்னுடன் நெருங்கி பழகிவிட்டு, இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

நள்ளிரவு 1 மணி என்பதால், ஸ்டேஷனில் இருந்த போலீசார், ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். அதனால் பாராவில் பெண் போலீஸ் ஆர்த்தி மட்டுமே இருந்துள்ளார். எனவே, காலையில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறார் ஆர்த்தி..
மதுபோதை: ஆனால் மதுபோதையில் இருந்த பெண், தன்னுடைய டூவீலரில் தயாராக பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றிக்கொண்டார்.. தனக்கு இப்போதே நியாயம் வேண்டும், என்னுடைய ஆண் நண்பரை உடனே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று சொல்லி நெருப்பை வைத்துக் கொள்ள முயன்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் போலீஸ் ஆர்த்தி, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் பெண் உடலில் தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டார். பிறகு சம்பவம் குறித்து , டியூட்டியிலிருந்த எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
நைட் கிளப்: அப்போதுதான் அந்த பெண் வடபழனி வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வரும் டான்சர் என்பது தெரியவந்தது.. இவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாராம்.. நைட் கிளப் ஒன்றில் தற்சமயம் நடனமாடி வருகிறாராம்.
நெருக்கம்: தன்னுடைய வீட்டு பக்கத்திலேயே வசிக்கும், கேட்டரிங் செய்து வரும் அறிவழகன் என்ற 34 வயது நபருடன் ஆர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிவழகனுக்கும் திருமணமாகி, மனைவியுடன் வசித்து வருகிறார்... எனினும், டான்சருக்கும், அறிவழகனுக்கும் நெருக்கம் அதிகமாகி, கள்ளத்தொடர்பிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் நெருக்கமான நிலையில், உன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அறிவழகன், டான்சரிடம் சொல்லி வந்துளளார்.
ஆனால், தற்போது தன்னுடைய மனைவியை விட்டு பிரிய முடியாது என்பதால், திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அந்த பெண்ணிடம் அறிவழகன் கூறியதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, இப்போதுள்ளதை போலவே, நாம் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்திக்கலாம் என்றும் சொன்னாராம். இதனால், இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.
கறார் பேச்சு: 2 நாட்களுக்கு முன்பு, புத்தாண்டையொட்டி, கிளப்பில் டான்சரை சந்தித்துள்ளார் அறிவழகன். இருவருமே அங்கு ஒன்றாக சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது மீண்டும் கல்யாண பேச்சை எடுத்துள்ளார் அந்த பெண். ஆனால், அதே உறுதியில் இருந்த அறிவழகன், மனைவியை விட்டுவிட்டு வர முடியாது என்று கறாராக சொல்லி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் கிளப்பை விட்டு வெளியேறியிருக்கிறார்.. ஒரு லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி, அதை தன்னுடைய டூவீலரில் வைத்துக் கொண்டு, நேராக வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு நள்ளிரவு 1 மணிக்கு சென்று, அறிவழகன் குறித்து புகாரை சொல்லி அழுதுள்ளார்.. மதுபோதையிலேயே தீக்குளிக்கவும் முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் புகார்: இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்மு, டான்சரின் கணவர் மற்றும் கள்ளக்காதலன் அறிவழகனை போன் போட்டு, ஸ்டேஷனுக்கு வரவழைத்தார்.. நடந்த சம்பவம் குறித்து மகளிர் போலீஸில் புகார் அளிக்கும்படி அவர்களிடம் அறிவுறுத்தியதுடன், இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணை கணவருடன் பத்திரமாக அனுப்பி வைத்தார். மதுபோதையில், வடபழனி போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது.












Click it and Unblock the Notifications