சென்னை ஈசிஆரில் விதிமீறிய கட்டிடங்களுக்கு பெரிய சிக்கல்.. செங்கல்பட்டு கலெக்டருக்கு அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் விதிமீறல் கட்டிடங்கள் இருப்பது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிப்பதாக நீதிபதி கூறினார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை பகுதியான திருவான்மியூர், நீலாங்கரையை தாண்டி, பனையூர், அக்கரை, முட்டுக்காடு, கேளம்பாக்கம்,மகாபலிபுரம், கூவத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் கடற்கரை பகுதிகள் மிக நீண்டது. இங்கு ஏராளமான சொகுசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை.. ஆனால் விதிகளை மீறி சொகுசு விடுதிகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.

அப்போது விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் எந்தவித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதேவேளையில் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "விதிமீறல் கட்டிடங்கள் இருப்பது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனினும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.விதிமீறல் கட்டிடங்களை கண்காணிக்க வேண்டியது மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கடமை. அப்படி இருக்கும் போது கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல.செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விதிகளை மீறி 16 கட்டிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.வழக்கு விசாரணை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய விசாரணையின் போது மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், கலெக்டர் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராக வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications