ஈசிஆரில் இனி வாழ்வதே பெரிய ரிஸ்க்தான்! நிலத்தடி நீரில் ஏற்பட்ட பரபர மாற்றம்! வெளியான ஷாக் ரிப்போர்ட்
சென்னை: வேகமான வளர்ச்சி மற்றும் அதீத போர்வெல் பயன்பாட்டினால் சிறந்த தரமான நிலத்தடி நீர் இருப்பதாக கூறப்பட்டு வந்த ECR தற்போது அந்த மதிப்பை இழந்து வருகிறது.
பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'அர்பன் க்ளைமேட்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீர் குறைவதால் படிப்படியாக கடல் நீர் உட்புகுவதால் ECR உடன் நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறுகிறது என்று கூறியுள்ளது.

இதற்கு காரணம், அதிகமான வீடுகள்., கட்டிடங்கள்.. அதாவது பில்ட்-அப் பகுதிகள் உருவாகி வருவதாலும், அதிகப்படியான போர்வெல் நீர் பயன்பாடும் இருப்பதாலும் நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இசிஆரில் பல அடக்கு மாடி கட்டிடங்கள் வருகின்றன. இதனால் அதிகமாக போர் வெல் போடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரின் ரீசார்ஜ் வேகம் குறைகிறது. இதனால் வேகமாக நிலத்தடி நீரின் அளவு குறைகிறது.
நிலத்தடி நீர்நிலைகளில் நிலத்தடி நீர் குறையும் பட்சத்தில், கடல்நீர் உள்ளே நுழைந்து, தண்ணீர் படிப்படியாக உப்பாக மாறும். இதுதான் தற்போது ஈசிஆரில் நடக்கிறது. நிலத்தடி நீர், கடல்நீரை நீர்நிலைகளுக்குள் செல்லாமல் தடுப்பதற்கு தடையாக செயல்படுகிறது. ஆனால் தற்போது நிலத்தடி நீர் இல்லாததால் கடல் நீர் உப்பாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
எங்கெல்லாம் சோதனை: ஆராய்ச்சியாளர்கள் திருவான்மியூர் முதல் முதுகாடு வரை நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்து உப்புத்தன்மையை பரிசோதித்தனர். நிலத்தடி நீரில் முற்றிலும் கரைந்த திடப்பொருள்கள் (TDS), pH, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வரம்புகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளை விட அதிகம் உள்ளன. pH 8.86 (7 ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலை), TDS 1,200 mg/L (500 mg/L என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலை), மற்றும் சோடியம் உள்ளடக்கம் 362 mg/L (ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பு 200 mg/L).
இப்படி எல்லா வரம்புகளையும் இந்த நீர் மீறி உள்ளது. இதற்கு காரணம் உள்ளே உப்பு நீர் நுழைந்ததுதான்.
ஈசிஆர் சாலை: தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்லும் ஈசிஆர் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.24,435 கோடியில் மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரிவாக்கத் திட்டத்திற்காக தயாரிக்க ஒரு நிறுவனத்தை வாடகைக்கு எடுக்க NHAI டெண்டர் எடுத்துள்ளது. மொத்தம் 675 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகள் மேம்படுத்தப்பட்டு 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது.
மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை, நான்கு வழிப் பாதை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், தேவையான இடங்களில், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தடையின்றி செல்ல கிரேடு பிரிப்பான்கள், மேம்பாலங்கள் மற்றும் வாகன சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு இடையூறு விளைவிப்பதற்குப் பதிலாக வெளியே செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பெரிய அளவில் வளைவுகள் இல்லாமல் நேராக செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான இயக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வின் அடிப்படையில் இந்த சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த சாலை பணிகள் நடக்க உள்ளன. 8 பிரிவுகள் என்றால்.. தனி தனியாக இந்த 675 கிலோ மீட்டரை பிரித்து.. அதன்பின் அதில் சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
எல்லா பணிகளும் அடுத்த வருடம் இறுதிக்குள் முடியும். அதே சமயம் இந்த எட்டு பிரிவுகளில், புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் (கடலூர்) பாதையை விரிவாக்கம் செய்வதற்கான காலக்கெடுவாக இந்த ஆண்டு நவம்பர் மாதத்தை NHAI நிர்ணயித்துள்ளது.
அடுத்த மாதம் இது முடியும். இந்த 1 கட்டத்தின் 38 கிமீ நீளம் இந்த மாதம் வரை 92% நிறைவு செய்துள்ளது. அதனால் அடுத்த மாதம் இந்த 1 கட்ட பணிகள் முடியும். இதேபோல், மாமல்லபுரம்-முகையூர் இடையேயான 31 கி.மீ., தூரம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூண்டியாங்குப்பம்-சத்தநாதபுரம்-நாகப்பட்டினம் பிரிவில் சுமார் 113கிமீ தூரம் வரை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. முகையூர் - மரக்காணம் வரையிலான 31 கி.மீ தூரத்தில் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரருடன் சமீபத்தில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications