சென்னை ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்தியதாக புகார்! மேலும் 5 பேர் கைது
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை விரட்டிச் சென்று மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில் மேலும் 5 பேர் போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) காரில் சென்ற பெண்களை வழிமறித்து இளைஞர்கள் அத்துமீறும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

கடந்த 26 ஆம் தேதி அதிகாலை 3.30மணிக்கு பெண்கள் ஒரு காரில் ஈசிஆரில் வந்து கொண்டிருந்தனராம். அப்போது மற்ற இரு சொகுசு கார்களில் வந்த இளைஞர்கள முட்டுக்காடு அருகே தங்களை வழிமறித்ததாகவும் அப்போது காரை நிறுத்தாமல் வீட்டுக்கு வந்ததாகவும் பெண்கள் புகார் தெரிவித்தனர்.
தங்கள் வீடு வரை அவர்கள் துரத்திக் கொண்டே வந்ததாகவும் அந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இளைஞர்கள் பயணம் செய்த காரை பெண்கள் பயணித்த கார் இடித்து விட்டதாக பிரச்சினை செய்தனராம். ஆனால் அது போல் தாங்கள் இடிக்கவில்லை என பெண்கள் தெரிவிக்கிறார்கள்.
இதில் யார் மீது தவறு இருக்கிறது என சரியாக தெரியவில்லை. இந்த நிலையில் பெண்களின் வீடியோவை வைத்து பெண்கள் எந்த அளவிற்கு அச்சப்பட்டனர் என்பது தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அந்த இளைஞர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்காக அந்த வீடியோக்களை ஆய்வு செய்த போது அதில் இளைஞர்களின் முகம் நன்றாக தெரிந்தது. அதை வைத்து போலீஸார் நேற்று அந்த இளைஞர்களின் காரை அடையாளம் கண்டனர். தொடர்ந்து கிழக்கு தாம்பரம் பகுதியிலும் பொத்தேரி பகுதியிலும் காரை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications