Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலாங்கரை நிஷாவின் நிசப்தம்.. சென்னை ஈசிஆர் வாடகை வீட்டில் இப்படியொரு பெண்? லீஸில் கொட்டிய கோடிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு வாடகைக்கு இருக்கும் சிலர், அந்த வீட்டை உள்வாடகைக்கு விடும் போக்கு சென்னை புறநகர் பகுதிகளில் அதிகமாக நடப்பதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்தபடி உள்ளன.. அப்படி உள்வாடகைக்கு விடுவது சட்டப்படி தவறாகும் என்பதால்தான், இதுகுறித்து ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஈசிஆரில் ஒரு பெண், செய்திருக்கும் துணிச்சல் காரியம், சென்னையை அலற விட்டுள்ளது.

இன்று வீடு வாடகைக்கு விடுவதில் ஆன்லைனில் நிறைய ஆப்கள் வந்துவிட்டன.. அதற்கேற்றவாறு ஏராளமான மோசடிகளும் நடக்கின்றன.. முக்கியமாக, வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர்களில் இருந்தால், போலி ஆவணத்தை தயாரித்து, வீட்டையே விற்க முயற்சிக்கும் போக்கு சமீபகாலமாக அதிகமாகவே நடக்கிறது..

வீட்டுக்கான பவர் தங்களிடம்தான் உள்ளது என்பதுபோல, ஆவணத்தை,போலியாக தயாரித்து இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன.

Chennai ECR neelankarai Nisha earns Rs 1 60 crore from leased houses and what happened actually

புரோக்கர்கள் கமிஷன்

புரோக்கர்களுக்கு கமிஷன் தரவேண்டுமே என்று ஆன்லைனிலேயே வீடு தேடும் பலரும் இதற்கெனவே உள்ள ஆப்பில் , லீசுக்கு வீட்டை தேடும்போது, சம்பந்தப்பட்ட ஏரியாவில் வாடகை வீடுகள் வீடியோக்களுடன் போட்டோக்களுடன் தென்படும்.. வீடு பிடித்துவிட்டால், அட்வான்ஸ் தருவது, அக்ரிமென்ட் போடுவது என அனைத்துமே ஆன்லைனிலேயே நடக்கிறது.. இவைகள்தான் மோசடிகளுக்கு வழிவகுத்து விடுகின்றன.

2 மாதங்களுக்கு முன்பு சென்னை முகப்பேரில் ஒரு சம்பவம் நடந்தது.. கனகராஜ் என்பவரின் வீட்டை ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து ராமலிங்கம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமலிங்கம் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், மோசடிகளை தடுக்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உத்தரவிட்டிருந்தது.

விழிப்புணர்வு வீடியோ

மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோவை ஹைகோர்ட், காவல்துறை தாக்கல் செய்தது. விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்ததுடன், விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த டிஜிபி, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருக்கு ஐகோர்ட் பாராட்டும் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் நிஷா.. இவர் "ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் வீடு கட்டும் மற்றும் விற்பனை நிறுவனத்தை, நடத்தி வந்துள்ளார். அத்துடன் வீடுகளை லீசுக்கு விடும் நிறுவனத்தையும் சொந்மாக வைத்து நடத்தி வந்துள்ளார்.

அக்ரிமெண்ட் + கமிஷன்

எப்போதுமே நிஷா யாருக்கு வீட்டை லீஸூக்கு ஏற்படுத்தி தந்தாலும், ஒரு வருடத்துக்கு அக்ரிமெண்ட் + ரூ.6 லட்சம், ரூ.12 லட்சம் கமிஷன் எடுத்துக் கொண்டு அதற்கு பிறகே வீட்டை லீசுக்கு தருவார்.. அதுமட்டுமல்ல, லீசுக்கு விடப்படும் வீடுகள் எல்லாமே தன்னுடைய சொந்த வீடு என்றும் சொல்லி வந்துள்ளார்.

இதற்கு பிறகுதான், நிஷா என்பவரே வாடகைக்கு வந்தவர்தானாம்.. வாடகைக்கு வீட்டை எடுத்து தங்கி வந்த நிலையில், அந்த வீட்டை தன்னுடைய வீடு என்று சொல்லி, லீசுக்கு விட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்தது..வீட்டின் உரிமையாளர்கள், லீசுக்கு இருப்பவர்களிடம் பேசும்போதுதான், இந்த உண்மை தெரியவந்துள்ளது.

வாடகைக்கு வந்த நிஷா

வாடகைக்கு வீடு எடுத்தபோது நிஷா, சில மாதங்கள் மட்டும் வாடகையை சரியாக தந்துவந்தாராம்.. பிறகு வாடகையை தராமல் ஏமாற்றி, வீட்டை லீசுக்கும் விட்டு சென்றுள்ளதை அறிந்து லீசுக்கு இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. இதனால் நிஷாவை போனில் தொடர்பு கொண்டால், ஸ்விட்ச் ஆப் என்றே வருகிறதாம்.

இதனால், நிஷா நடத்தி வரும், ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்த்துள்ளனர்.. ஆனால், அந்த கம்பெனி மூடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபோல 30க்கும் மேற்பட்டோர் நிஷாவிடம் லீசுக்கு வந்து ஏமாந்துள்ளனர்.. அவர்களிடம் கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை, வீட்டை லீசுக்கு தந்து நிஷா பணம் சம்பாதித்திருக்கிறாராம்..

நிஷா எங்கே

கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து, அதை பலருக்கு லீசுக்கு விட்டு இதுவரை, ரூ.1.60 கோடி வரை நிஷா மோசடி செய்ததும் அம்பலமாகியிருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 30 பேருமே நீலாங்கரை போலீசுக்கு சென்று நிஷா மீது புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணையும் விரிவாகியிருக்கிறது.. ஆனால், அதற்குள் நிஷா எஸ்கேப் ஆகிவிட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+