ஈசிஆர் பங்களாவில் உல்லாசம்.. மூவரிடம் புழங்கிய பணம்.. தாம்பரம் அருகே யாரிந்த பெண்கள்? மலைத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என ஏராளமான குற்ற நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன... இதோ தலைநகர் சென்னையில் நடந்த சம்பவம் பேரதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

எனவேதான், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்..

Tambram Chennai ECR Resort

இதற்காகவே போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம்கூட, வண்டலூர் ரயில் நிலையம் அருகே, 2 இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்ததை கண்டறிந்து, கைது செய்திருந்தனர்.

சுடுகாட்டில் 3 பேர்

இந்நிலையில், பீர்க்கன்காரணை ஏரிக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில், மர்ம நபர்கள் சிலர் கஞ்சா உபயோகித்து வருவதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த 3 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். சதீஷ்குமார் (21), சாமுவேல் (24), தினேஷ் (25) என்ற மூன்று பேருமே, மும்பையில் 1200 போதை மாத்திரைகளை வாங்கி கொண்டு, ரயிலேறி வந்து சென்னையில் சலுகை முறையில் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

இப்போது விற்பனைக்கு வைத்திருந்த 1200 போதை மாத்திரைகள், சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேருமே இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களானவர்கள்.. கடந்த டிசம்பரில், 3 பேரும் ஆந்திராவுக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து ஜனவரி மாதம் முழுக்க விற்று, டபுள் லாபம் சம்பாதித்துள்ளனர்.

ஈசிஆர் ரிசார்ட்டில் உல்லாசம்

திடீரென கையில் காசு ஏராளமாய் புழங்கியதால், திக்குமுக்காடிய இந்த இளைஞர்கள், ஈசிஆர் சாலை ரிசார்ட்டில், உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, 3 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கரணை, காமகோட்டி நகர் பகுதியிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், சம்பவ இடத்துக்கு விரைந்து அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் டார்ஜிலிங்கிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, பள்ளிக்கரணை சுற்றியிருக்கும் கூலி தொழிலாளர்களுக்கு விற்பவர்களாம். இந்த 3 பேரும் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tambram Chennai ECR Resort

அதிர்ந்த கண்ணகி நகர் போலீஸ்

அதேபோல, துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியில் கூலி தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு , கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்ணகி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதால், 3 பெண்கள் கையில் கஞ்சாவுடன் நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்..

இவர்கள் பெரும்பாக்கம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிவேதா (27), வியாசர்பாடியை சேர்ந்த சலீம் ஷரீப் (23), சைதாப்பேட்டையை சேர்ந்த பிரமிளா (28) என்பதும் தெரியவந்தது. இந்த பெண்கள், ஒடிசா மாநிலத்தில் கஞ்சா வாங்கி வந்து, கண்ணகி நகர் பகுதியில் விற்கிறார்களாம்.. இதையடுத்து, இந்த பெண்களிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுடன் கார்த்திக் என்ற நபரும் ஈடுபட்டுள்ளதால், 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+