ஈசிஆர் ரோட்டில் யாருங்க இது? மொத்தமாக திரண்ட முட்டுக்காடு.. அடுத்த செகண்டே ஓடோடி வந்த ஆபீசர்ஸ்.. ஏன்
சென்னை: வெள்ள நிவாரண தொகை சில இடங்களில் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளார்கள்.. என்ன நடக்கிறது சென்னையில்?
புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 4 மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை, தமிழக அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள்: மேலும், மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
எனவே, டோக்கன் பெற்று பணம் வாங்க வரும் பயனாளிகளை விட, விண்ணப்பம் பெற்று நிவாரணம் கோரும் பொதுமக்கள் எண்ணிக்கையே, தினந்தோறும் அதிகரித்து காணப்படுகிறது.. வருமானவரி செலுத்துபவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, ஒரே குடியிருப்பில் வருமான வரி செலுத்தும் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
ரேஷன் அட்டைகள் : அதேபோல சில இடங்களில், ரேஷன் அட்டையில் விவரங்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளதால், ஆங்கிலம் தெரியாதவர்கள் லிஸ்ட்டில் தங்களது பெயர் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். சில இடங்களில், விண்ணப்பம் இல்லாததால் பொதுமக்கள் திரும்பி செல்கிறார்களாம். சில இடங்களில், சம்பந்தப்பட்ட அலுவலர்களே விண்ணப்பம் வழங்குவதை குறைத்து வருகிறார்களாம்.
இந்நிலையில், தங்களுக்கு நிவாரணம் தரப்படவில்லை என்று கூறி, திருப்போரூர் பகுதியில் பெண்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.. மிக்ஜாம் புயலில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக, திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு உள்ளது..
முட்டுக்காடு: இங்கு கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் 3,4,10,-ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், அளவுக்கு அதிகமாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர்.. ஆனாலும், இவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படவில்லையாம்.. இதனால் ஆத்திரம் அடைந்த, அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள், பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர்..
இந்த திடீர் மறியலால், கிழக்கு கடற்கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்து. 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதற்குள் தகவலறிந்து கானாத்தூர் போலீசார் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..
நிவாரண தொகை: "மழையால் கடுமையாக நாங்கள் பதிக்கப்பட்டோம்.. முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கிவிட்டது.. வீட்டிலிருந்து பொருட்கள் நாசமாகிவிட்டன.. 4 நாட்களுக்கு கரண்ட்டும் இல்லாமல் அவதிப்பட்டோம்.. ஆனால், இப்போது நிவாரணத்தொகை ஏன் தரவில்லை என்றே தெரியவில்லை".. என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.. பின்னர், நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்ததையடுத்து, முட்டுக்காடு மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications