Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுதமியின் நில மோசடி வழக்கு: அழகப்பனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி! 11 ரகசிய அறை மர்மம் அவிழுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுதமியின் நிலத்தை மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் கைதான அழகப்பனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1980, 90களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தவர் கவுதமி. இவர் பாஜக இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்பட்டது.

Chennai Egmore court orders Alagappan to be in Police custody for 3 days

ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில் எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருந்தேன்.

அப்போது எனக்கு கட்டுமான தொழில் செய்து வரும் பாஜக நிர்வாகியான அழகப்பன் என்பவர் அறிமுகமானார். அவரது குடும்பத்தினருடன் நான் நன்கு பழகியுள்ளேன். இதனால் அவரிடம் எனது சொத்தை விற்று தருமாறு நான் கேட்டேன். இதற்காக அவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தேன். போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பன்னும் அவரது மனைவி, குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இது குறித்து நான் கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு அழகப்பன், அவரது மனைவி, குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவில் அழகப்பன் குறித்து புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை இல்லை என்பதால் கவுதமி பாஜகவிலிருந்து விலகினார்.

இதையடுத்து நடிகை கவுதமியின் புகாரின் பேரில் அழகப்பன் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அழகப்பனின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி 11 அறைகளுக்கு பூட்டு போட்டனர். அழகப்பன், அவரது மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நில மோசடி புகாரில் தேடப்பட்டு வந்த அழகப்பன், மனைவி நாச்சியம்மாள் உள்ளிட்டோர் திருச்சூரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து அழகப்பனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+