சென்னை மின்சார ரயில்.. ரயில்வே அமைச்சரை டேக் செய்து தமிழச்சி தங்கப்பாண்டியன் அழுத்தமான பதிவு
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் இந்த தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த மின்சார ரயில் சேவை பாதிப்பு என்பது சென்னையின் பிரதான மின்சார ரயில் வழித்தடமான தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தை மிக மோசமாக பாதித்திருக்கிறது. இது தொடர்பாக தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சரை எக்ஸ் தளத்தில் டேக்ஸ் செய்து பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு ஏற்க முடியாதது மற்றும் மிகுந்த கவலையளிக்கிறது. ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களுக்கு, புறநகர் ரயில்கள் மட்டுமே மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து ஊடகமாக உள்ளன.

இந்த முக்கியமான வழித்தடத்தில் சேவைகளைக் குறைப்பது என்பது சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும். இத்தகைய திடீர் குறைப்புகள் மோசமான திட்டமிடலையும், பயணிகளின் நலனில் காட்டும் அலட்சியத்தையுமே பிரதிபலிக்கின்றன. நடுத்தர வர்க்கம் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைச் சிதைக்கும் முடிவுகளை, வெறும் 'வழக்கமான மாற்றங்கள்' என்று ஒதுக்கிவிட முடியாது.
பிரபல மருத்துவமனைகளுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தந்த பெரிய பாடம்.. மருத்துவர்கள் அறிய வேண்டியது
மதிப்பிற்குரிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அவர்களையும், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (அவர்களையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உடனடியாக முழுமையான ரயில் சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும். பொதுப் போக்குவரத்து என்பது ஒரு அத்தியாவசியத் தேவையே தவிர, அது சலுகை அல்ல. நிர்வாகத் தோல்விகளுக்காகச் சென்னை மக்கள் ஒருபோதும் அவதிப்படக் கூடாது" இவ்வாறு கூறியிருந்தார்.
செங்கோட்டையன்
தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில் "சென்னையின் போக்குவரத்துத் தேவைகளில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் புறநகர் மின்சார ரயில் சேவையில், போதிய மாற்று ஏற்பாடுகள் கொடுக்காமல் தொடர்ந்து ரயில் சேவையைக் குறைத்து வருவது பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய அநீதி
எழும்பூர் ரயில்நிலைய பராமரிப்பு பணிக்காக 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போதே பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தநிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 49 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.
பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் என்ற பெயரில், லட்சக்கணக்கான பயணிகளின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் இத்தகைய அலட்சிய நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
மெத்தனப்போக்கு
ஏற்கனவே, சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், ரயில்களை நம்பியிருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாற்று ஏற்பாடுகளைச் சரியாகத் திட்டமிடாமல், ரயில் நிலையங்களில் மக்களைக் கூட்டமாகத் தவிக்க விடுவது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.
நடுத்தெருவில் மக்கள்
தென்னக ரயில்வே நிர்வாகம் இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் போது, பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களைத் தவிர்த்து, மாற்று அட்டவணையை முறையாக வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கு ஈடாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உள்ளது. அரசு இயந்திரங்களின் ஒருங்கிணைப்பு இல்லாததால் இன்று பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
கூடுதல் பேருந்துகள்
எனவே, ரயில்வே துறை உடனடியாக இந்த ரத்து நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும். அதேபோல், தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்". இதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுக எம்பி வில்சன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications