Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல மருத்துவமனைகளுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தந்த பெரிய பாடம்.. மருத்துவர்கள் அறிய வேண்டியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல கார்ப்பரேட் மருத்துவமனைகள் மருத்துவர்களைத் தங்களின் "ஊழியர்களாகவே" அதாவது சொத்தாகவே கருதி வந்தன. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் "மருத்துவர்கள் சுதந்திரமான நிபுணர்கள்" என்று அழுத்தமாக கூறியுள்ளது.. சரி அப்படி என்னதான் சொல்லியிருக்கிறது என்றால், தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களை தொழிற்சாலைத் தொழிலாளர்களைப் போல நடத்த முடியாது என்பது தான். அதேபோல போட்டி நிறுவனங்களுக்கு செல்லக்கூடாது என்ற ஒப்பந்தங்களையும் காலி செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். ஒவ்வொரு மருத்துவர்களும் அறிய வேண்டிய தீர்ப்பினை பார்ப்போம்.

இந்தசெய்திக்கு போகும் முன்பு, தனியார் நிறுவனங்கள் பற்றி சொல்ல வேண்டும்.. சில தனியார் நிறுவனங்கள், தங்களது போட்டி நிறுவனத்தில் சேரக்கூடாது என்று சேரும் போதே ஒப்பந்தம் போடும். ஒரிஜினல் சான்றிதழ்களையும் வாங்கும்.. வேலையைவிட்டு திடீரென போனால் பணமும் கட்ட சொல்லும்.. இவை எல்லாம் இப்போது அதிகமாக நடக்கிறது. இது மருத்தவத்துறையில் நடப்பதாக கூறப்படுகிறது.

HC verdict that every doctor should know Justice Anand Venkatesh s big lesson for private hospitals

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களை தொழிற்சாலைத் தொழிலாளர்களைப் போல நடத்த முடியாது என்றும், அவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களில் 'போட்டி நிறுவனங்களுக்குச் செல்லக்கூடாது' அல்லது 'நோயாளிகளை அழைத்துச் செல்லக்கூடாது' போன்ற நிபந்தனைகளைச் சேர்க்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் மிகப்பெரிய தீர்ப்பை வழங்கி உள்ளது.

மேலும், மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டுமே தவிர, வணிக ரீதியாகப் போட்டியிடக் கூடாது என்று தீர்ப்பு எழுதிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். என்ன வழக்கு.. ஏன் இப்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை பார்ப்போம்.

3 ஆண்டு கால ஒப்பந்தம்

கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பாலராமன் பழனியப்பன் என்பவருக்கும், சென்னையில் உள்ள புகழ் பெற்ற மியாட் மருத்துவமனைக்கும் இடையே பணி தொடர்பாக செப்டம்பர் 8, 2022 அன்று மூன்று ஆண்டு காலத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது வேலைக்கு சேரும் மருத்துவர்களுடன் தனியார் மருத்துவனைகள் ஒப்பந்தம் செய்வது வழக்கம்..

அப்படியான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு விதிகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக 8.3-வது பிரிவின்படி, ஒப்பந்தம் முடிந்த பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, மருத்துவமனையிலிருந்து 15 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள 'போட்டி' மருத்துவமனைகளில் மருத்துவர் சேரக்கூடாது அல்லது தனியாகப் பயிற்சி செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

42 லட்சம் கேட்ட மருத்துவமனை

ஆனால் 2025-ல் கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பாலராமன் பழனியப்பன் மியாட் மருத்துவமனையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பாதியில் முடித்துக்கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால், மியாட் மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் மூன்று மாத ஊதியத்திற்கு ஈடான ₹42 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை அணுகியது. இந்த விவகாரத்தில் தகராறைத் தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கக் கோரி மியாட் மருத்துவமனை மனு தாக்கல் செய்திருந்தது.

மியாட் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்

ஆனால் இப்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், , தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களை தொழிற்சாலைத் தொழிலாளர்களைப் போல நடத்த முடியாது என்று தீர்ப்பு அளித்தார். அத்துடன், மனுத் தாக்கல் செய்த மியாட் மருத்துவமனைக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.


டாக்டர் பணியாளர் அல்ல.. சேவை வழங்கும் நிபுணர்

இந்த வழக்கினால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறுகையில், " ஒரு டாக்டர் என்பவர் அந்த மருத்துவமனையின் பணியாளர் இல்லை. மருத்துவர்கள் வழங்கும் சேவையின் தன்மையைக் கருத்தில் கொண்டால், ஒரு மருத்துவமனை அவர்களின் சேவையை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்; அவர்களை ஒரு நிறுவனத்தின் சாதாரண ஊழியரைப் போல நடத்த இயலாது" என்றார்.

மருத்துவமனை என்பது லாபம் ஈட்டும் நிறுவனம் அல்ல

ஒப்பந்தத்தின் 8-வது பிரிவு குறித்து நீதிபதி வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறும் போது, "ஒரு மருத்துவமனை டாக்டருடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப் பார்த்து 'கட், காப்பி, பேஸ்ட்' செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தாங்கள் நோயாளிகளுக்குச் சேவை செய்யும் மருத்துவமனை என்பதை மறந்து, தாங்கள் லாபம் ஈட்டும் நிறுவனம் மட்டுமே என்பதை மருத்துவமனை நிர்வாகம் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது.

ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை

மருத்துவமனைகள் இல்லாமல் மருத்துவர்கள் வாழ முடியும், ஆனால் மருத்துவர்கள் இல்லாமல் ஒரு மருத்துவமனை ஒருபோதும் இயங்க முடியாது. எனவே, எந்தச் சூழலிலும் ஒரு மருத்துவரைத் தொழிற்சாலைத் தொழிலாளியாகவோ அல்லது ஒரு தொழில்நுட்ப ஊழியராகவோ கருத முடியாது. மருத்துவர்களின் அந்தஸ்தைக் குறைக்கும் இத்தகைய ஒப்பந்தங்கள் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் பிரிவு 23-ன் கீழ் சட்டவிரோதமானவை மற்றும் செல்லாதவை .


மருத்துவர் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம்

ஒரு மருத்துவர் எங்கு வேண்டுமானாலும் சேவை செய்ய அவருக்கு உரிமை உண்டு. நோயாளிகள் முன்னரே சிகிச்சை பெற்றவர்கள் என்பதற்காக அவர்களைப் பார்க்கக் கூடாது என்று தடுக்க முடியாது " என்றார். மேலும் மருத்துவமனையின் மனு அடிப்படை ஆதாரமற்றது. ஒரு மருத்துவர் தங்களின் தாளத்திற்கு எப்போதும் ஆட வேண்டும் என்று எதிர்பார்த்து, அவரை வேட்டையாடும் நோக்கிலேயே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது," என்று கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுவைத் தள்ளுபடி செய்தார்.


மருத்துவர்களின் சுயமரியாதை காக்கப்பட்டுள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மருத்துவத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகக் கருதப்படுகிறது . அதற்கான காரணங்களை பார்ப்போம். தமிழ்நாட்டில் இதுவரை பல கார்ப்பரேட் மருத்துவமனைகள் மருத்துவர்களைத் தங்களின் "ஊழியர்களாகவே" அதாவது சொத்து போல் கருதி வந்தன. எளிதாக கையைவிட்டு போய்விட முடியாது.. ஆனால், இந்தத் தீர்ப்பு "மருத்துவர்கள் சுதந்திரமான நிபுணர்கள்" என்பதை உரக்கச் சொல்லியுள்ளது. இது மருத்துவர்களின் சுயமரியாதையை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தி உள்ளதாக கருதப்படுகிறது

ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி

ஒரு மருத்துவமனையை விட்டு வெளியேறினால், குறிப்பிட்ட தூரத்திற்குள் கிளினிக் வைக்கக்கூடாது அல்லது வேறு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என்ற நிபந்தனை மருத்துவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து வந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் அத்தகைய நிபந்தனைகள் "செல்லாதவை" என அறிவிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் பயமின்றித் தங்களுக்குப் பிடித்த இடத்திற்கு இனி வேலைக்கு செல்ல முடியும்.

தொழிலாளி அல்ல; சேவை புரிபவர்

ஐடி நிறுவன ஊழியர்களைப் போலவோ அல்லது தொழிற்சாலைத் தொழிலாளர்களைப் போலவோ மருத்துவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முடியாது என்பதை சென்ன உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. இது மருத்துவத் தொழிலை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல், ஒரு "சேவையாக" மட்டுமே பார்க்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகங்களுக்கு நேரடியாக உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையாகும்.

பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் தடை

பெரிய மருத்துவமனைகள் தங்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, வளரும் மருத்துவர்களை நீதிமன்றம் அல்லது மத்தியஸ்தம் என்ற பெயரில் அலைக்கழிப்பதை அதாவது நீதிபதி சொன்னது போல் வேட்டையாட முடியாது. அதேபோல் தங்களுக்குப் பிடித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகளை, "மருத்துவர் வேறொரு மருத்துவமனைக்கு மாறிவிட்டார்" என்ற காரணத்தைச் சொல்லி இனி தடுக்க முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+