மிக்ஜாம் புயலால் கனமழை.. சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து! திருவள்ளூரில் பஸ்கள் நிறுத்தம்..
சென்னை: மிக்ஜாம் புயல் காரணம் சென்னையில் மின்சார ரயில் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதோடு திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் வருகிறது.

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும். நாளை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதோடு சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்பட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை செய்து வருகிறது.
சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து என்பது அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னை மின்சார ரயில் சேவை காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னெச்சரிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிகமாக பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications