சென்னை மக்கள் கவனத்துக்கு.. நவம்பர் 23 இல் 49 புறநகர் ரயில்கள் ரத்து.. எந்த வழித்தடங்களில் தெரியுமா?
சென்னை: சென்னையில் முக்கியப் போக்குவரத்தாக உள்ள புறநகர் ரயில் சேவையையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவம்பர் 23-ஆம் தேதி சென்னையில் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவை
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பிரதானமாக இருக்கும் நிலையில், புறநகர் ரயில் சேவைகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலை செய்வோர் என அனைவருக்கும் பெரிதும் உதவி வருகிறது.

மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது. சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும்.
இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள், பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
பராமரிப்பு பணிகள்
அந்த வகையில், சென்னை - அரக்கோணம் இடையே உள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 49 புற நகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை - அரக்கோணம் இடையேவுள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நேரங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
அதேநேரம், பயணிகளின் வசதிக்காக நவம்பர் 23 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications